கர்நாடகா, ஹைதராபாத், மத்திய பிரதேசம்.. ஒரே நேரத்தில் இந்து முஸ்லீம் மத மோதல்கள்.. உச்சக்கட்ட பதற்றம்
பெங்களூர்: கர்நாடகா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பல்வேறு இடங்களிலும் கடந்த வியாழக்கிழமை திடீரென வன்முறை வெடித்தது. மத நிகழ்வுகளின்போது இந்த வகுப்புவாத பதற்றங்கள் வெடித்தன. ஒரே நேரத்தில் 3 முக்கிய தென்னிந்திய நகரங்களில் அடுத்தடுத்து வெடித்த வன்முறைகளால் பதற்றம் அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் பாகல்கோட்டில் சிவாஜி ஜெயந்தி ஊர்வலத்தின்போது மோதல்கள் ஏற்பட்ட நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் ஒரு துர்கா கோயில் வளாகம் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. ஹைதராபாத்திலும் ரமலான் தொழுகையின்போது சிறிய வகுப்புவாத பதற்றம் ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள சியோரா என்ற இடத்தில் துர்கா கோயில் சேதப்படுத்தப்பட்டதாகத் தகவல் பரவியது. இதனால் அங்கு இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது. கல்வீச்சு சம்பவங்களும் கூட நிகழ்ந்தன. அங்குக் கோயிலில் ஆரத்தியும், அருகிலுள்ள மசூதியில் தொழுகையும் ஒரே நேரத்தில் நடந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
ஒரு இளைஞர் கோயிலின் கிரில்லை சேதப்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், முதலில் வார்த்தை மோதலாகப் பிரச்சினை வெடித்தது. ஆனால் பின்னர் அது பெரும் மோதலாகவும், அடுத்தடுத்து கல்வீச்சிலுமாக மாறியது. இதனால் கடுமையான மோதல் வெடித்தது. விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களைக் கலைக்க லேசான தடியடி பயன்படுத்தினர். நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தாலும் கூட இன்றும் அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது..
பதற்றம்
மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகேயும், மசூதிக்கு அருகேயும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரி சம்பத் உபாத்யாய் விளக்கம் கொடுத்துள்ளனர். அதில் எந்த மத கட்டமைப்பும் சேதப்படுத்தப்படவில்லை என்றும், காயங்கள் குறித்த புகார்கள் இல்லை என்றும் குறிப்பிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசாத் சவுக் பகுதி நீண்ட காலமாகவே பதற்றமான இடமாகக் கருதப்படுகிறது.. அங்குக் கோயில் மற்றும் அதை ஒட்டிய மசூதியில் ஒரே நேரத்தில் ஆரத்தி மற்றும் தொழுகை நடக்கும்போது அது தொடர்பாகச் சிக்கல்கள் வெடிக்கிறது.. தற்போது அப்பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில், சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் பங்க மசூதி வழியாகச் சென்றபோது கல்வீச்சு நடந்ததால் பதற்றம் வெடித்தது. மசூதி பகுதியிலிருந்து கல் வீசப்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. போலீஸ் கண்காணிப்பாளர் சித்தார்த் கோயல் மீது கற்கள் பட்ட நிலையில், அவருக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
ஊர்வலத்தின்போது ஒலித்த சில பாடல் வரிகளுக்கு முஸ்லிம் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததே பதற்றத்திற்கு மற்றொரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறை உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பையும் கலைத்தது. இதையடுத்து பாகல்கோட் நகரில் அடுத்த நான்கு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வீச்சு வழக்கில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஹைதராபாத்
அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் மோதல் வெடித்தது. ஹைதராபாத் நகரில் அம்பர்பேட்டிலும் மத மோதல் ஏற்பட்டது. ரம்ஜான் தொழுகை நடந்த மசூதி வழியே சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் சென்றது. அப்போது எழுந்த உரத்த இசை, கோஷங்களுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு வாக்குவாதமும் லேசான மோதலும் அரங்கேறின.
சுமார் 30% முஸ்லிம் மக்கள் வசிக்கும் அம்பர்பேட், மத உணர்வு மிகுந்த பகுதியாகும். நிலைமை உணர்ந்து, காவல்துறையினர் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்தனர். இதில் காயம், சேதம் இல்லை. மோதல் மேலும் பரவாமல் தடுக்க அங்குக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications