திடீர் திருப்பம்.. சோமேட்டோ ஊழியர் மீது புகார் தந்த பெண் தலைமறைவு?.. கைது செய்யும் பிளானில் போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் சோமேட்டோ நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் மீது புகார் வைத்த பெண் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. புகார் வைத்த பெண்ணுக்கு எதிராக சோமேட்டோ ஊழியர் போலீசில் புகார் அளித்த நிலையில்.. அந்த பெண் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
பெங்களூரை சேர்ந்தவர் ஹிட்டேசா சந்திராணி கடந்த சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரலானது. தனது வீட்டிற்கு டெலிவரி கொடுக்க வந்த சோமேட்டோ ஊழியர் மூலம் தான் தாக்கப்பட்டதாக இவர் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
தன்னுடைய வீட்டிற்கு லேட்டாக உணவு டெலிவரி செய்ய வந்தவர்.. தன்னுடைய மூக்கில் குத்தியதாக ஹிட்டேசா சந்திராணி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த சம்பவம் இணையத்தில் பெரிய சர்ச்சையானது.

என்ன நடந்தது
ஹிட்டேசா சந்திராணியின் வாதத்தின்படி.. அந்த டெலிவரி பாய் மிகவும் தாமதமாக வந்தார். இதை குறித்து தட்டிக்கேட்ட போது, தன்னுடைய மூக்கில் அந்த ஊழியர் குத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அதோடு மோசமான வார்த்தைகளில் திட்டியதாகவும் ஹிட்டேசா சந்திராணி அந்த ஊழியர் மீது புகார் வைத்துள்ளார். ஆனால் சோமேட்டோ ஊழியர் காமராஜ் இதற்கு எதிராக பேசி உள்ளார்.

காமராஜ்
சோமேட்டோ ஊழியர் காமராஜின் கூற்றுப்படி.. அந்த பெண் உணவை கேன்சல் செய்த பின்பும் அதை திருப்பி கொடுக்கவில்லை. கொடுக்கப்பட்ட உணர்விற்கும் காசு கொடுக்கவில்லை. அதோடு தன்னை மோசமாக திட்டி , செருப்பை தன் மீது வீசினார். இதில் தற்காப்புக்காக செயல்பட்ட போது அந்த பெண் முகத்தில் பட்டுவிட்டதாக காமராஜ் கூறியுள்ளார்.

பெயில்
இந்த சம்பவம் தொடர்பாக காமராஜ் மீது ஹிட்டேசா சந்திராணி புகார் அளிக்க.. காமராஜ் கைது செய்யப்பட்டு தற்போது பெயிலில் வெளியே வந்துள்ளார். அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் ஹிட்டேசா சந்திராணி மீது காமராஜ் புகார் அளித்துள்ளார். இவர் பொய் சொல்கிறார், தனக்கு எதிராக பொய்யான புகார் கொடுத்துள்ளார், தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று ஹிட்டேசா சந்திராணிக்கு எதிராக காமராஜ் புகார் அளித்துள்ளார்.

தலைமறைவு
இதில் அந்த பெண்ணுக்கு எதிராக மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால் தற்போது திடீர் திருப்பமாக அந்த பெண் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. பெங்களூரில் வசிக்கும் அந்த பெண்.. மகாராஷ்டிராவில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணைக்கு பயந்து இவர் மகாராஷ்டிரா சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீஸ் தரப்பு
இதுகுறித்து பேசி உள்ள போலீஸ் தரப்போ.. அந்த பெண் மகாராஷ்டிராவில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த பெண் பாதுகாப்பு கருதி அங்கே சென்று இருக்கலாம். ஆனால் அவர் எங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் அவரை நாங்கள் கைது செய்து விசாரிக்க வேண்டி இருக்கும். இன்றே அவர் எங்களிடம் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications