பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த மர்ம மரணம்.. சிக்கலில் நித்தியானந்தா.. கைது செய்து விசாரிக்க உள்துறை ஆர்டர்.. அடுத்து என்ன?

இளம்பெண்ணின் மர்ம மரண வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்து விசாரித்து மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: இளம்பெண்ணின் மர்ம மரண வழக்கில் நித்தியானந்தாவை ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் கைது செய்து விசாரித்து மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தனக்காக தனிநாடு கேட்டு, அங்கேயே செட்டில் ஆக முயற்சி செய்து கொண்டு இருக்கும் நித்தியானந்தாவிற்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. நித்தியானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று ஏற்கனவே போலீசில் நிறைய புகார் இருக்கிறது.

இதன் மீது நிறைய வழக்குகள் பதியப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் நித்தியானந்தா ஆசிரமத்தில் சங்கீதா என்ற பெண் மர்ம மரணம் அடைந்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டு அதன் மீதான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

முதலாளியிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய கோச்சானியன்.. 60 வயதை கடந்து லட்சுமியை கரம் பிடித்த தருணம் முதலாளியிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய கோச்சானியன்.. 60 வயதை கடந்து லட்சுமியை கரம் பிடித்த தருணம்

8 வருடம்

8 வருடம்

இந்த சங்கீதா வழக்கு 5 வருடம் பழமையான வழக்கு ஆகும். கடந்த 2014 டிசம்பர் 28ம் தேதி சங்கீதா பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுணன் - ஜான்சிராணி ஆகியோரின் மகள்தான் சங்கீதா. சங்கீதா தன்னுடைய சகோதரியின் மரணத்தை (காச நோயால் மரணம்) தொடர்ந்து நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார்.

சேலம்

சேலம்

சேலத்தில் உள்ள ஆசிரமத்தில் மன அமைதிக்காக சேர்ந்த அவர் பின் பெங்களூர் ஆசிரமத்திற்கு குடி பெயர்ந்தார். சகோதரியின் மரண அழுத்தம் காரணமாக அவர் பெங்களூரிலேயே குடியேறினார். தினமும் நித்தியானந்தாவின் பேச்சுக்களை கேட்கும், விழாக்களில் கலந்து கொள்ளும் அவர் 2014ல் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதற்கு எதிராக சங்கீதாவின் தந்தை அர்ஜுணன் கர்நாடக போலீசில் புகார் அளித்தார்.

மரணம் அடைந்தார்

மரணம் அடைந்தார்

ஆனால் இதை போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை. இந்த ஐந்து வருடத்தில் சங்கீதா வழக்கும் ஒரே ஒரு முறைதான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த மனஉளைச்சலில் அர்ஜுணனும் இயற்கை எய்தினார். இந்த நிலையில் சங்கீதாவிற்கு நீதி வேண்டி அவரின் தாய் ஜான்சி ராணி தற்போது தனியாக போராடி வருகிறார்.

கடிதம்

கடிதம்

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி கோரிக்கை வைத்தார். போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை, மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் அளித்திருந்தார்.இதையடுத்து தற்போது இதில் உள்துறை அமைச்சகம் தனது கவனத்தை திருப்பி, கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

என்ன உத்தரவு

என்ன உத்தரவு

அதன்படி சங்கீதாவின் மர்ம மரண வழக்கில் நித்தியானந்தாவை கைது செய்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.வெளிநாட்டில் உள்ள நித்தியானந்தாவை அழைத்துவர அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அவரை ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

என்ன உதவி

என்ன உதவி

இது தொடர்பாக சிபிஐ, இன்டர்போல் உதவியை நாடலாம் என்று கூறியுள்ளது. இன்டர்போல் மூலம் அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் வாங்கவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் நித்தியானந்தாவிற்கு எதிராக விரைவில் அதிரடி போலீஸ் நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Home Ministry advises taking action against Nithiyanantha on a mysterious death case of a woman in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X