இத மட்டும் செய்யுங்க.. கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி தான்.. சிஎம்மிடம் ரகசியம் சொன்ன மேலிடம்!ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிடுவதாக கட்சி மேலிடம் கூறியதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதறியதோடு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக அதிருப்தி அடை எழும் அவர் விளக்கிய நிலையில் கட்சி மேலிடம் அவரிடம் ரகசியம் ஒன்றை பகிர்ந்ததோடு, ஒரு விஷயத்தை செய்யும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் பசவராஜ் பொம்மை அமைதியாகி உற்சாகத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று மாநிலத்தில் மொத்தம் 221 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தலையொட்டி பாஜகவில் 224 தொகுதிகளில் 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியல் 2 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளது. முதல் பட்டியலில் 189 தொகுதிகளுக்கும், 2வது பட்டியலில் 23 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இன்னும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் பாஜகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 55க்கும் அதிகமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10க்கும் அதிகமான சிட்டிங் எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் முதல்வர், மாஜி துணை முதல்வர், அமைச்சர்கள் என பலரும் புறம் தள்ளப்பட்டுள்ளனர். மூத்த தலைவர்களுக்கு வயதாகும் நிலையில் மாநிலத்தில் இளம்படைகளை பாஜக களமிறக்கி உள்ளது.
குறிப்பாக பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் எம்எல்ஏவாக உள்ள உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பெங்களூர் மகாதேவபுரா தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இங்கு சிட்டிங் எம்எல்ஏவாக பாஜகவின் அரவிந்த் லிம்பாவளி உள்ளார். மேலும் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தொகுதியில் 6 முறை வெற்றி பெற்று அமைச்சராக உள்ள அங்காராவுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் அரசியலில் ஓய்வை அறிவித்துள்ளார்.
அதேபோல் பெலகாவி மாவட்டம் அதானி தொகுதியில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி பாஜகவில் இருந்து விலகினார். இதேபோல் முடிகெரே சிட்டிங் எம்எல்ஏ எம்பி குமாரசாமி, ஹாவேரியின் நேரு ஒலேகார் ஆகியோரும் ஓய்வை அறிவித்துள்ளனர். மேலும் பல தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் வேட்பாளர்களை இறுதி செய்யும் சமயத்தில் சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களை ஓரம்கட்ட பாஜக மேலிடம் முடிவு செய்தது. இதுபற்றி முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கட்சி மேலிடம் கூறியுள்ளது. இதை கேட்ட அவர் ஷாக்காகி உள்ளார். மேலும் புறக்கணிப்பு செய்ய வேண்டாம். இது தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறினார். ஆனால் பாஜக மேலிடம் ஒப்புக்கொள்வில்லை.

மாறாக பாஜக மேலிடம் பசவராஜ் பொம்மையிடம், ‛‛இந்த பார்முலா தான் குஜராத்தில் பயன்படுத்தினோம். அங்கு 7வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளோம். அதேபோல் கர்நாடகாவிலும் இளம் வயதினருக்கு வாய்ப்பு வழங்குவது பாஜகவுக்கு கைக்கொடுக்கும்'' என கூறியுள்ளது. மேலும் கர்நாடகா மாநில பாஜக மேலிட பொறுப்பாளரான மான்சுக் மாண்டவியா, ‛‛மாநிலத்தில் அதிருப்தி அலை எழாமல் பார்க்க வேண்டியது எங்களின் பொறுப்பு. பெரிய தலைவர்களிடம் நாங்கள் பேசி கொள்கிறோம். மற்றவர்களை மட்டும் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்தகுஜராத் பார்மூலா நிச்சயம் கைக்கெடுக்கும்'' என்றார்.
இதற்கு தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் ஒகே சொல்லியிருக்கிறார். இதையடுத்து தான் சிட்டிங் எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்களை புறக்கணித்து பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 42 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்காமல் இருந்தது. இதில் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டீல் உள்ளிட்டோரும் அடங்குவார். ஆனால் அங்கு அதிருப்தி உருவாகாமல் பாஜக பார்த்து கொண்டது. மேலும் 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் 156 இடங்களில் பாஜக வென்று 7 வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications