நீதிபதி கணக்கு போட்டபடியே கேட்ட கேள்வி.. ரூ.12,000 சம்பளத்தில் கணவன் எப்படி வாழறது? விழித்த மனைவி
பெங்களூர்: 12,000 ரூபாய் சம்பளம் வாங்கும் கணவர், தன்னுடைய குழந்தை பராமரிப்புக்காக 10,000 ரூபாய் எப்படி வழங்க முடியும்? என்று கோர்ட்டில் நீதிபதி மனைவியிடம் கேட்ட கேள்வி வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.. இதன்மூலம், குடும்ப உறவுகளில் நீதிமன்றங்கள் காட்டும் அக்கறை, தம்பதியினரின் ஒற்றுமை, குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் மிகுந்த கவனத்தை செலுத்தி வருவதும் தெரியவருகிறது.

விசாரணை: கடந்த வாரம் டெல்லியில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.. மனைவி தாக்கல் செய்திருந்த மனுவில், "என்னுடைய முழங்கால் வலி சிகிச்சைக்கு ரூ.4 முதல் 5 லட்சம், டிரஸ்கள் வாங்குவதற்கு ரூ.15,000, வீட்டின் சாப்பாட்டு செலவுக்கு ரூ.60,000, வெளியில் ஓட்டலில் சாப்பிட ரூ.20,000 என்று ரூ.6 லட்சத்து 16,000 -யை கணவர் மாதந்தோறும் வழங்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
இந்த மனுவை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி லலிதா.கே, "இதென்ன இவ்வளவு பெரிய லிஸ்ட்? ஒரு மாசத்துக்கு ஒருவரின் செலவுக்கு ரூ.6 லட்சத்து 16,000 தேவைப்படுமா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு தேவையா? இவ்வளவு பணம் வேண்டுமென்றால் வேலைக்கு போய் அப்பெண்ணை சம்பாதிக்க சொல்லுங்கள்.. இவ்வளவு பணத்தை கணவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. அளவுக்கதிகமான பணம் கேட்டால் மனுவை நிச்சயம் நிராகரித்து விடுவேன்" என்று காட்டமாக கூறியிருந்தார்.
ஹைகோர்ட்: இப்போது இதுபோலவே இன்னொரு வழக்கு நீதிமன்றத்துக்கு வந்துள்ளது.. கர்நாடகா ஹைகோர்ட்டில் இந்த வழக்கு சமீபத்தில் நடந்துள்ளது.. மனைவி ஒருவர் தன்னுடைய கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு குறித்து அந்த பெண்ணின் வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட நீதிபதி, கீழமை நீதிமன்றம் விதித்த தொகை என்ன? என்று கேட்டள்ளார்.. அப்போது, மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்காத நிலையில், மகனுக்கு மட்டும் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் பதிலளித்தார்.
விசாரணை : இதனைக்கேட்ட நீதிபதி, கணவரின் வருமானம் என்ன? என்று கேட்டார். அதற்கு மனைவியின் வழக்கறிஞர், "கணவரின் சம்பளம் 62,000 ரூபாய்.. ஆனால், கணவரின் வழக்கறிஞர் அவரது மொத்த சம்பளம் ரூ. 18,000 என்றும், வீட்டிற்கு எடுத்துச் செல்லும் தொகை ரூ. 12,000 மட்டும்தான்" என்று விளக்கினார்.
உடனே நீதிபதி, "12,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபர், தன்னுடைய குழந்தை பராமரிப்பிற்கு 10,000 ரூபாய் எப்படி வழங்க முடியும்? 10 ஆயிரத்தை தந்துவிட்டு, அவர் எப்படி வாழ்வார்? அது முடியாது... கோர்ட் இப்படி இதற்கெல்லாம் உத்தரவிட முடியும்? குழந்தை செலவுக்காக முக்கால்வாசி பணத்தையும் கொடுத்துவிட்டால், அந்த மனிதன் தன்னுடைய வாழ்க்கை செலவுகளை எப்படி நிர்வகிக்க முடியும்? வேண்டுமானால், எதிர்காலத்தில் கணவனின் ஊதியம் உயர்ந்தால், மனைவி தனியாக ஜீவனாம்சம் கோரி விண்ணப்பிக்கலாம்" என்று உத்தரவிட்டார்.
விவாதங்கள்: இந்த வீடியோவை கர்நாடக ஹைகோர்ட், தன்னுடைய யூடியூப் சேனலில் ஷேர் செய்துள்ளது.. இந்த வீடியோவானது பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் பெற்று வருகிறது.. அத்துடன் சில விவாதங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகிறது.
கணவன் வேலையில் இருப்பதால், இந்த தொகையை கொடுக்க முடிகிறது.. அதுவே கணவனுக்கு வேலை இல்லாவிட்டால் என்ன செய்வது? இப்போதெல்லாம் மனைவிகளும் சம்பாதிக்கத்தானே செய்கிறார்கள்? கணவன் மட்டும் ஏன் பராமரிப்பு செலவுக்கு பொறுப்பேற்க வேண்டும்? மனைவிகளுக்கு தங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் பங்கில்லையா? " என்று இணையவாசிகள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
கமெண்ட்கள்: மேலும் சில இணையவாசிகள், "இதுக்குதான் நான் கல்யாணமே செய்துக்கறதே இல்லை.. சம்பாதிக்கிறதில் பாதியை மனைவிக்கு தந்துட்டால், நான் என் செலவுகளுக்கெல்லாம் எங்கே போறது?" என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications