Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் நாளில்.. ஹாயாக எழுந்து பார்த்த பாஜகவிற்கு.. ஷாக் கொடுத்த காங்கிரஸ்.. கர்நாடகாவில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நடக்கும் நாளிலேயே பாஜகவிற்கு காங்கிரஸ் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியங்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று தீவிரமாக நடந்து வருகிறது. அங்கே 9 மணி வரை 8.3 சதவிகிதம் பேர் வாக்களித்து உள்ளனர். இந்த முறை வாக்கு சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 113. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

How Congress is already leading over BJP strategy-wise in the Karnataka assembly election?

அங்கே முக்கோண மோதல் நடைபெறுகிறது. பெரிய அளவில் கூட்டணிகள் எதுவும் அமைக்கப்படவில்லை. கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஸ் கட்சிகளிடையே பிரதான போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி உளிட்ட சில கட்சிகளும் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாஜக ஷாக்; இந்த தேர்தல் பிரச்சாரம் முழுக்க காங்கிரஸ் முக்கியமான சில விஷயங்களை சிறப்பாக செய்தது. காங்கிரஸ் கட்சி மிக சிறப்பான கிரவுண்ட் வேலைகளை செய்தது. களத்தில் இறங்கி தொகுதி தொகுதியாக நிர்வாகிகள் முறையாக பணிகளை செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் - முன்னாள் முதல்வர் சித்தராமையா இடையே மோதல் உள்ளது. யார் முதல்வர் ஆவப்போவது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனாலும் அதை எல்லாம் மறந்து தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்து இவர்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்தனர்.

களப்பணியை தாடி இந்த தேர்தலில் காங்கிரஸ் 4 முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தியது.

முதல் விஷயம் - சமூக வலைத்தளம்: அதன்படி சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் தீவிரமாக பணிகளை செய்தது. #byebyebjp தொடங்கி #paycm வரை பல முக்கிய டேக்குகளை டிரெண்டாக்கியது. மோடி தொடங்கி பாஜகவினர் யாரையும் விடாமல் வரிசையாக தினமும் டிரெண்டில் இருந்தது. சுவாரசிய மீம்கள், வீடியோக்கள் என்று தூள் கிளப்பியது.

How Congress is already leading over BJP strategy-wise in the Karnataka assembly election?

இரண்டாவது விஷயம் - விளம்பரம்: தொடர்ந்து ஊடகங்களில், யூ டியூப் போன்ற தளங்களில், செய்தி தாள்களில் காங்கிரஸ் விளம்பரம் கொடுத்தது. பாஜக செய்த தவறுகளை எல்லாம் சுவாரசியமான விளம்பர யுக்திகளை பயன்படுத்தி கார்ப்பரேட் மூளையுடன் சிறப்பாக விளம்பரம் செய்து டிரெண்டானது.

கடந்த 10 நாட்களில் காங்கிரஸ் கொடுத்த செய்தி தாள் விளம்பரங்கள் எல்லாம் மிகப்பெரிய கார்ப்பரேட் ஸ்டெடி செய்ய வேண்டிய விஷயம்.

மூன்றாவது விஷயம் - ஊழல்: பாஜகவின் ஊழல் புகார்களை காங்கிரஸ் கையில் எடுத்தது. 40 சதவிகித கமிஷன், paycm என்று ஒப்பந்தத்தார்கள் கொடுத்த புகார் போன்றவற்றை கடைசிவரை லைம் லைட்டில் காங்கிரஸ் வைத்து இருந்தது. மக்கள் இடையே ஒப்பந்த ஊழல் தொடர்பான விஷயங்கள் எப்போதும் உரையாடலில் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டது.

நான்காவது விஷயம் - ஜாதி: அங்கே லிங்காயத்துகள், ஒக்கலிகா போன்ற ஜாதியினரை காங்கிரஸ் அரவணைத்து சென்றது. பாஜக போல இவர்களை கழற்றிவிடவில்லை. வீர சைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர்.

கர்நாடகாவில் லிங்காயத்து தலைவர்களை பாஜக ஒதுக்கி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் எடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தேர்தல் பணிகளோடு அவர் ஓரம்கப்பட்டு உள்ளார்.

அதேபோல் லிங்காயத்து பிரிவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவடி இதேபோல் ஓரம்கட்டப்பட்டு தற்போது காங்கிரசில் இணைந்து உள்ளார். அவரும் லிங்காயத்து தலைவர்தான்.

இப்போது இன்னொரு லிங்காயத்து தலைவரான ஷெட்டர் காங்கிரசுக்கு சென்றுள்ளார்.

கர்நாடகாவில் லிங்காயத்துகள் மிகவும் வலிமையான ஜாதி பிரிவினர். லிங்காயத்துகள் பெருமளவில் வட கர்நாடகாவில்தான் உள்ளனர். அங்கே இருக்கும் பெலகாவி, தார்வாட் மற்றும் கடக் மாவட்டங்களில் அவர்கள் அதிகம் உள்ளனர்.

How Congress is already leading over BJP strategy-wise in the Karnataka assembly election?

அதேபோல் அவர்கள் பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, பிதார் மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களிலும் கணிசமான அளவில் உள்ளனர். மேலும் தெற்கு கர்நாடகாவிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். குறிப்பாக பெங்களூர், மைசூர் மற்றும் மாண்டியாவில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

லிங்காயத்துகள் பொதுவாக வாக்குகளிக்கும் விதம்தான் அங்கே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இந்த நிலையில்தான் அங்கே வீர சைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர்.

தேர்தல் நாளில் அதிர்ச்சி; இந்த நிலையில்தான் தற்போது தேர்தல் நாளில் அதிகாலையில் இருந்து #byebyebjp தொடங்கி #paycm வரை பல முக்கிய டேக்குகளை காங்கிரஸ் டிரெண்டாக்கி வருகிறது. அதேபோல் #CongressWinning150 என்ற டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

இதெல்லாம் போக சிலிண்டருக்கு பூஜை செய்யும் பிரச்சாரத்தையும் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. அந்த பிரச்சாரமும் செய்யவும்.. ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சிலிண்டருக்கு பூஜை செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியினர் வாக்களிக்க செல்கின்றனர்.

சிலிண்டர் விலை உயர்வை உணர்த்தும் மெசேஜ் போல இந்த சிறப்பான யுக்தியை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.

அதேபோல் பூத் சிலிப்களை வழங்கவும், காங்கிரஸ் சிறப்பான பூத் கமிட்டி ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. முக்கியமாக பெங்களூரில் காங்கிரசின் பூத் கமிட்டி ஏற்பாடுகள் பாஜகவை விட சிறப்பாக உள்ளது.

காங்கிரசின் இந்த அதிரிபுதிரி திட்டமிடல் காரணமாக தேர்தல் நாளிலேயே பாஜக கொஞ்சம் சுணங்கித்தான் போய் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+