Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மம்தா பானர்ஜி செய்த ஒரு போன் கால்! அப்படியே கை கோர்த்த ஆம் ஆத்மி - காங்கிரஸ்.. ப்பா மாறும் காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இன்று நடக்க உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பதற்கு பின் மமதா பானர்ஜியின் தூது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் இன்று நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் பங்கேற்கின்றன. ஆம் ஆத்மி கட்சி சார்பாக அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்க முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் - ஆம் ஆத்மி மோதலால் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதில் குழப்பம் நிலவியது. டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசுக்கு பதிலாக மத்திய அரசு மாற்றும் அதிகாரத்தை வழங்கும் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை விடுத்தது. கடந்த மீட்டிங்கிலேயே இருவருக்கும் இடையில் இதனால் மோதல் ஏற்பட்டது.

How did Mamata Banerjee make a truce between Congress and Aam Aadmi ahead of the Bangalore meeting?

இரண்டு கட்சிகளும் கூட்டத்திலேயே இதை பற்றி காரசார விவாதம் செய்தன . எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை பற்றி பேசும் காங்கிரஸ் இதை பற்றி பேசுமா என்று கேள்வி எழுப்பியது ஆம் ஆத்மி. இதில் காங்கிரஸ் முடிவு எடுத்தால்தான் எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்றும் ஆம் ஆத்மி கூறியது.

இந்த நிலையில்தான் இந்த மசோதா விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக செயல்பட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்க்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே மசோதாவை எதிர்க்க வேண்டும். ஆம் ஆத்மிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றுதான் காங்கிரஸ் நினைத்து இருக்கிறது.

ஆனால் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே இரண்டு தரப்பின் மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை சரி செய்து வைத்ததே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆம் ஆத்மி தலைவர்களுக்கு போன் செய்தி பெங்களூர் கூட்டத்தில் கலந்து கொள்ளுமப்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் ஆம் ஆத்மி தலைவர்கள் இதில் உறுதியான பதிலை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் இங்கும் அங்கும் மாறி மாறி போன் கால்கள் சென்றுள்ளன. ஆனாலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்தே மம்தா பானர்ஜி ஆம் ஆத்மி தலைவர்களுக்கு போன் செய்து என்ன பிரச்சனை என்று விசாரித்துள்ளார்.

அவர்களோ.. டெல்லி சட்ட மசோதா விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்று, மசோதாவை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இதை மம்தா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிடம் பேசி.. நீங்கள் வெளிப்படையாக நிலைப்பாட்டை அறிவியுங்கள் என்று கூறி உள்ளார். இதையடுத்தே காங்கிரஸ் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை அறிவித்தது.

இதன் பின்பே அர்விந்த் கெஜ்ரிவால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்தார். மம்தா பேசிய மத்தியச பேச்சுக்கள்தான் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே மோதலை தவிர்க்க காரணமாக அமைந்தது.

பெங்களூர் கூட்டம்: மொத்தம் 24 கட்சிகளின் தலைவர்கள் இன்று பெங்களூரில் சந்திக்க உள்ளனர். தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.

கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

கடந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழுக்க முழுக்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+