Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட்மிஸ்! தமிழகத்துக்கு அனுப்ப முயற்சி? பெங்களூர் ஐடி ரெய்டில் சிக்கிய ரூ.42 கோடியின் ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஐடி ரெய்டு சோதனையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் 23 அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஒரு நிமிடம் தாமதம் செய்திருந்தாலும் கூட அந்த பணம் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரில் வசித்து வருபவர் அம்பிகாவதி. இவர் பெங்களூர் மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் சங்கத்தின் துணை தலைவராக உள்ளார். இவரது மனைவி அஸ்வதம்மா. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

இவர் கடந்த 2001ம் ஆண்டு காவல் பைரசந்திரா வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் இவர் முன்னாள் எம்எல்ஏவான அகண்ட சீனவாச மூர்த்தியின் சம்பந்தி ஆவார்.

இந்நிலையில் அம்பிகாவதி-அஸ்வதம்மாவுக்கு தம்பதியிடம் ஏராளமான பணம் இருப்பதாகவும், அந்த பணம் காரில் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அஸ்வதம்மாவுக்கு சொந்தமான வீடுகளில் அதிரடியாக சோதனையை தொடங்கி உள்ளனர்.

How IT officials seized Rs.42 crore seized in Bangalore raid when its trying to sent to Tamil Nadu?

பெங்களூர் சுல்தான் பாளையாவில் உள்ள 2 வீடுகள், காவல் பைரசந்திராவில் உள்ள அடுக்குமாடி வீடு, ஆத்மானந்தா காலனியில் அஸ்வதம்மா பெயரில் உள்ள அவரது தம்பி பிரதீப்பின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி ஆய்வுகளை தொடங்கி உள்ளனர்.

இதில் காவல் பைரசந்திரா கணேஷ் பிளாக்கில் உள்ள அஸ்வதம்மாவின் அடுக்குமாடி வீட்டில் தற்போது அவரது குடும்பத்தினர் யாரும் வசிக்கவில்லை. தரைதளம் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல் தளத்தில் கணவர் அம்பிகாவதியின் அலுவலகம் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அஸ்வதம்மா பெயரில் ஆத்மானந்தா காலனியில் உள்ள வீட்டில் அவரது தம்பி பிரதீப் உள்ளார். இந்த வீட்டில் உள்ள ஒரு அறை பூட்டிக்கிடந்தது. அதனை திறந்து அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு தான் 23 அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.42 கோடி அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் இந்த பணம் தமிழகத்துக்கு அனுப்பி வைக்க பதுக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக அட்டை பெட்டிகளில் பணம் எண்ணி வைக்கப்பட்டு இருந்ததும், அந்த பணத்தை காரில் தமிழகத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் வருமான வரித்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அதிகாரிகள் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் கூட அந்த பணம் காரில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

How IT officials seized Rs.42 crore seized in Bangalore raid when its trying to sent to Tamil Nadu?

மேலும் இந்த பணம் தமிழ்நாட்டுக்கு எதற்காக அனுப்பி வைக்க முயற்சிக்கப்பட்டது? இந்த பணம் யாருக்காக அனுப்பி வைக்கப்பட இருந்தது? இந்த பணத்தின் மூலதனம் என்ன? ஒருவேளை ஐடி அதிகாரிகள் வருவதை நினைத்து மறைக்க முயன்றனரா?என்பது உள்ளிட்ட விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் இதுபற்றிய விசாரணையில் இறங்க உள்ளனர். இதனால் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது. அதோடு இதில் தொடர்புடையவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+