காவி வேட்டி- கலர் டீ சட்டை அணிந்து ஆளே மாறிப்போன ராஜேந்திர பாலாஜி.. 20 நாட்கள் சிக்காதது எப்படி?
பெங்களூர்: காவி வேட்டி அணிந்து கொண்டு மாஸ்க் போட்டுக் கொண்டு கர்நாடகா மாநிலம் பி.எம்.சாலையில் தனிப்படை போலீஸாரால் ராஜேந்திர பாலாஜி சுற்றி வளைக்கப்பட்டார். இவர் 20 நாட்கள் சிக்காதது எப்படி என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
Recommended Video

ஆவின் மோசடி வழக்கில் தனது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தவுடன் தான் எப்படியும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்பதை ராஜேந்திர பாலாஜி தெரிந்து கொண்டார்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அவர் தலைமறைவாகிவிட்டார். இவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. எனினும் 20 நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்தார்.

முன்ஜாமீன் மனு
இதனிடையே அவர் ஆவின் மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர் எங்கிருக்கிறார் என அவரது உறவினர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனது உறவினர்களை போலீஸார் துன்புறுத்துவதால் தனது முன் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதியதொரு மனுவை தாக்கல் செய்தார்.

நாளை முன்ஜாமீன் மனு விசாரணை
இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்றைய தினம் கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் வைத்து நடுரோட்டில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் காவி நிற வேட்டி அணிந்து கொண்டு கலர் டீசர்ட் அணிந்திருந்தார். போலீஸ் வாகனத்தை பார்த்ததும் காரில் தப்ப முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

20 நாட்கள் கழித்து சிக்கிய ராஜேந்திர பாலாஜி
விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அளித்தும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், தனிப்படை அமைத்து தேடியும் வந்த நிலையில் ஒரு வழியாக இன்றைய தினம் பிடிபட்டார். கடந்த 20 நாட்களாக அவர் தனிப்படையினரிடம் சிக்காதது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவி வேட்டி டீசர்ட்டில் ராஜேந்திர பாலாஜி
ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், உறவினர்களின் வீடுகளில் தங்கினால் போலீஸாரிடம் சிக்கி விடுவோம் என்பதால் அவர் காரிலேயே வலம் வந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு காராக மாறி மாறி பயணித்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துவிட்டாராம். அது போல் கரை வைத்த வேட்டி கட்டினாலும் ஆபத்து என்பதை உணர்ந்த ராஜேந்திர பாலாஜி காவி நிற வேட்டியை அணிந்து கொண்டு வலம் வந்ததாகவும் தெரிகிறது.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications