குறுக்கே வந்த அத்வானி, மோடி! சித்தராமையா முதல்வரானது எப்படி? கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏவால் சர்ச்சை
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து 2 மாதங்களே ஆன நிலையில் சித்தராமையா முதல்வரானது எப்படி? என்பது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் எல்கே அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை இழுத்து மூத்த எம்எல்ஏ பசவராஜ் ராயரெட்டி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். கர்நாடகாவில் கடந்த மே மாதம் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

பாஜக 66 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 19 தொகுதிகளுக்கும் மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்துள்ளது. தற்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக கர்நாடகா முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் சித்தராமையா முதல்வரானார். டிகே சிவக்குமாரை கட்சி மேலிடம் சமாதானம் செய்து துணை முதல்வராக்கியது. இதற்கிடையே தான் கர்நாடகா முதல்வராக சித்தராமையா ஆனது எப்படி? என்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான பசவராஜ் ராயரெட்டி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொப்பல் மாவட்டம் எலபுர்கா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக பசவராஜ் ராயரெட்டி உள்ளார். இவர் தனது அரசியல் பயணத்தை ஜனததாளம் கட்சியில் இருந்து துவங்கினார். எம்பி, எம்எல்ஏ, அமைச்சராக இருந்துள்ளார். அதன்பிறகு ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் செயல்பட்ட இவர் 2000ல் காங்கிரஸில் இணைந்தார். கடந்த 2013-2018 ல் கர்நாடகா முதல்வராக சித்தராமையா இருந்தபோது இவர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இந்த முறை அமைச்சர் பதவியை எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் கொப்பல் மாவட்டம் குக்னூர் தாலுாக தலாகால் கிராமத்தில் க்ருஹ ஜோதி திட்டத்தை தொடங்கி வைக்கும் விழாவில் பசவராஜ் ராயரெட்டி பங்கேற்றார். அப்போது அவர் பேசியது தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. விழா மேடையில் பசவராஜ் ராய ரெட்டி, ‛‛பாஜகவை ரத்தம் சிந்தியும், வியர்வை சிந்தியும் எல்கே அத்வானி வளர்த்தார். ஆனால் பிரதமராக நரேந்திர மோடி தான் பொறுப்பேற்றார். சில நேரங்களில் இப்படி நடக்கும். பிரதமர் மோடியை போல் அரசியலில் அதிர்ஷ்டம் சிலருக்கு கைக்கொடுக்கும்.
ஏன் நமது முதல்வர் சித்தராமையாவையே நீங்கள் எடுத்து கொள்ளுங்களேன். அவர் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்தார். தற்போது 2வது முறையாக முதல்வராகி உள்ளார். இதுபற்றி பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? இது அதிர்ஷ்டத்தால் நடந்துள்ளது.
நான் எம்எல்ஏ, எம்பியாக இருந்தபோது பசவராஜ் பொம்மையின்(கர்நாடகா பாஜக முன்னாள் முதல்வர்) தந்தையான எஸ்ஆர் பொம்மையுடன் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். நான் முன்னாள் பிரதமர் தேவேகவுடா முதல்வராக இருந்தபோது அமைச்சராக இருந்துள்ளேன். எச் டி குமாரசாமி(தேவேகவுடாவின் மகன், முன்னாள் முதல்வர்) என் முன் நிற்க பயப்படுவார்.
ஆனால் இப்போது நாம் என்ன செய்ய முடியும்? அது அவர்களின் விதி(பசவராஜ் பொம்மை, குமாரசாமி இருவரும் கர்நாடகா முதல்வராகி விட்டனர்). பல சந்தர்ப்பங்களில் நம்மால் முன்னேறி செல்ல முடியாத நிலை ஏற்படும். இதற்காக நாம் சிறியவர்கள், அவர்கள் தான் பெரியவர்கள் என அர்த்தம் கொள்ள கூடாது. மாறாக சேவை மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்'' என்றார்.
பசவராஜ் ராயரெட்டியின் இந்த பேச்சு தான் தற்போது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு காலத்தில் சித்தராமையாவின் ஆதரவாளராக அறியப்பட்ட பசவராஜ் ராயரெட்டி தற்போது அமைச்சர் பதவி கிடைக்காததால் டிகே சிவக்குமாரின் ஆதரவாளராக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கட்சி மாறி வந்தாலும் கூட அதிர்ஷ்டத்தின் காரணமாக சித்தராமையா 2வது முறையாக முதல்வராகி உள்ளதாக பசவராஜ் ராயரெட்டி பேசி விரக்தியை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
மேலும் சமீபத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி கோரியும், அமைச்சர்கள் தங்களை மதிக்க வேண்டும் எனவும் சில எம்எல்ஏக்கள் சித்தராமயைாவுக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதம் வெளியாகி கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இடையே மோதல் இருப்பதாக செய்திகள் பரவியது. இந்த கடிதத்தில் கையெழுத்திட்ட எம்எல்ஏக்களில் பசவராஜ் ராயரெட்டியும் ஒருவர். இதனால் பசவராஜ் ராயரெட்டியை சமீபத்தில் சித்தராமையா திட்டியிருந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் இப்படி பேசியிருப்பது கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இடையே விரிசல் அதிகரிக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications