திக் திக் திக்.. ரிசல்ட் வருகிறது.. வாக்குகள் எண்ணப்படுவது எப்படி. தேர்தல் முடிவை இப்படியும் அறியலாம்
பெங்களூரு: நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கர்நாடக மாநில தேர்தல் ரிசல்ட் இன்று வெளியாகிறது.. அந்தவகையில், எவ்வாறு, எப்படி எண்ணப்படுகின்றன தெரியுமா?
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் களத்தில் மோதுகின்றன.. இந்த தேர்தலில் மும்முனை போட்டியாக இருந்தாலும்கூட, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான மோதல்தான் பெருமளவில் பேசப்பட்டுவருகிறது.

அறிவுறுத்தல்: முன்னெச்சரிக்கையாக அனைத்து தொகுதிகளிலும், காலை 6:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்கு சீட்டுக்கள் எண்ணும் மையம் அருகில், 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணம், இறுதி சடங்கு தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதேபோல, விதிமுறைப்படி யாரும் ஆயுதங்கள் கொண்டு செல்லவோ, பட்டாசு உட்பட வெடி பொருட்கள் பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உருவ பொம்மை எரித்தல், இசை கச்சேரி நடத்துவது, சர்ச்சைக்குரிய கோஷங்கள் எழுப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இயந்திரங்கள்: வாக்குச்சீட்டுகள் எண்ணுவதற்காக, கர்நாடக மாநிலம் முழுதும் மொத்தம் 36 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன... வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உட்பட அனைத்து இயந்திரங்களும் சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று, பாதுகாப்பு அறைகளில், சீல் வைக்கப்பட்டது.
பிறகு, அனைத்து அறைகள் வெளியேயும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, அறைக்குள்ளேயும், வெளியேயும், மையத்தை சுற்றி, பல அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
8 மணிக்கு முன்னதாக, வாக்கு எண்ணிக்கை பணியில் ஊழியர்கள் 3 பிரிவாக ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர் இருப்பார்.. ஒவ்வொரு மையத்திலும் 10 முதல் 14 மேஜைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 2 மேஜைகள் ஒதுக்கப்படும்.

சீல் உடைப்பு: பிறகு, இன்று காலை 7:30 மணிக்கு, சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் முன்னிலையில், பாதுகாப்பு அறை சீல், உடைத்து திறக்கப்படும். பிறகு, இயந்திரங்கள் ஓட்டுகள் எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்படும்.. அதன்படி, காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன....
14 மேஜைகள்: முதலில், ஏதாவது ஐந்து இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை, விவிபேட் இயந்திரத்துடன் ஒப்பிடுவார்கள்.. ஓட்டு எண்ணிக்கைக்காக மொத்தம் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் பரிந்துரை பெயரில், தொகுதி தேர்தல் அதிகாரிகள் அடையாள அட்டை வழங்கியுள்ள முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.. அனைத்து செயல்பாடுகளும் அங்கு பொருத்தப்பட்டுள்ள வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படும்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications