பெங்களூர் மஞ்சுளா வாயில் என்ன அது.. கணவன் செய்யுற காரியமா அது.. ஆடிப்போன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி பகுதியில் வசிக்கும் சித்த லிங்கேஸ்வரா என்பவர், மஞ்சுளா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மஞ்சுளா மீது சந்தேகம் அடைந்த சித்த லிங்கேஸ்வரா, அவர் யாருடன் அடிக்கடி போனில் பேசுகிறார் என்று கேட்டு வாயில் பசைபோட்டு ஒட்டியிருக்கிறார்.அதன்பின்னர் அவர் செய்தது ஆடிப்போக வைத்துள்ளது.

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் காரோ கியாதஹள்ளி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சித்த லிங்கேஸ்வரா. இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்துள்ளது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சித்தலிங்கேஸ்வரா தனது குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார். சொந்த ஊரான ராய்ச்சூராய்ச்சூரில் குழந்தைகள் வசித்து வருகின்றனர்.

Bangalore love marriage

பெங்களூரின் புறநகரில் குடியிருக்கும் சித்த லிங்கேஸ்வரா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், மஞ்சுளா ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்து வருகின்றனர். மனைவி மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் சித்த லிங்கேஸ்வரா அடிக்கடி சண்டை போட்டு வந்திருக்கிறாராம். அதுபோல் கடந்த பிப்ரவரி 11ம் தேதி இரவும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தனது மனைவி மஞ்சுளாவின் கழுத்தை நெரித்து சித்த லிங்கேஸ்வரா கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆடிப்போன மஞ்சுளா, உடனே சத்தம் போட்டுள்ளார். உடனே சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க சித்த லிங்கேஸ்வரா, வீட்டில் கிடந்த பசையை (பெவி குவிக்) எடுத்து மஞ்சுளாவின் வாயில் போட்டு ஒட்டியிருக்கிறார். அதன்பிறகு அவரது கழுத்தை சித்த லிங்கேஸ்வரா நெரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே மஞ்சுளாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அங்கு நடக்கும் சண்டை அறிந்து அவர்கள் உடனே சத்தம் போட்டதுடன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீட்டிற்கு போலீசார் வருகிறார்கள் என்பதை அறிந்த சித்த லிங்கேஸ்வரா உடனே தப்பி ஓடி விட்டார். போலீசார் வீட்டில் போய் பார்த்த போது, உயிருக்கு போராடிய நிலையில் மஞ்சுளா இருந்துள்ளார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், மஞ்சுளா அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்தாராம். இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு வாயில் பசையை போட்டு ஒட்டியும், கழுத்தை நெரித்தும் சித்தலிங்கேஸ்வரா கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் மஞ்சுளா உயிர் தப்பியிருக்கிறார் இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்த லிங்கேஸ்வராவை தேடிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+