கோவிலுக்குள் சட்டையை கழற்றனுமா? எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா! வெளியே நின்று தரிசனம்! பகீர் தகவல்
பெங்களூர்: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான் சட்டையை கழற்றிவிட்டு கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய கூறியதால் கர்நாடகா முதல்வர் வெளியே நின்று சாமி கும்பிட்டது தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛டெங்கு, மலேரியா, கொரோனா உள்ளிட்டவற்றை எதிர்க்க முடியாது. அதனை ஒழிக்க வேண்டும். அதுபோல் தான் சனாதனமும்'' என தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு என்பது இந்திய அளவில் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. நாட்டில் குறிப்பிட்ட மக்கள் சனாதன தர்மத்தை பின்பற்றி வரும் நிலையில் உதயநிதி அவர்களுக்கு எதிராக பேசியுள்ளதாகவும், இன அழிப்பு குறித்து அவர் பேசியிருப்பதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாஜகவின் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முற்றிலுமாக மறுத்துள்ளார். தான் சனாதனம் பற்றி தான் பேசியதாகவும், இன அழிப்பு குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதோடு இந்த விஷயத்தில் எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே தான் சனாதனம் குறித்த பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக பாஜக சார்பில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அடுத்தடுத்து பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறிய கருத்து ஒன்று தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது கர்நாடகாவை சேர்ந்த சமூக சீர்த்திருத்தவாதியான நாராயண குருவின் 169வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பெங்களூரில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் ஒரு முறை கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றேன். அப்போது அங்கு எனது சட்டையை கழற்றிவிட்டு கோவிலுக்குள் செல்லும்படி கூறினார்கள். அப்போது நான் கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு வெளியே நின்றே சாமி கும்பிட்டுவிட்டு வந்தேன். அவர்கள் கோவிலுக்கு வரும் அனைவரையும் சட்டையை கழற்றும்படி கூறுவது இல்லை. சில பேரை மட்டுமே அப்படி வரும்படி கூறுகின்றனர். இது மனிதாபிமானத்துக்கு எதிரான நடைமுறை. ஏனென்றால் கடவுள் முன்பு அனைவரும் சமம்'' என்றார்.
இந்தியாவை பொறுத்தமட்டில் பல கோவில்களில் சாமி தரிசனம் செய்யும் ஆண்கள் சட்டையை கழற்றிவிட்டு செல்லும் நடைமுறை உள்ளது. இத்தகைய சூழலில் தான் சித்தராமையா தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து மேடையில் பேசியுள்ளார். முதல்வர் சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு தற்போது ஆதரவு, எதிர்ப்பு என விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!











Click it and Unblock the Notifications