கர்நாடகாவில் பேருந்து டிக்கெட் கட்டணம் 3 மடங்கு உயர்வு... திகைத்து நின்ற தொழிலாளர்கள்
பெங்களூரு: ஊரடங்கால் பணிபுரியக் கூடிய இடங்களிலேயே சிக்கித் தவித்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் ஒரு முறை பயண அடிப்படையில் கர்நாடகாவில் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து பெங்களூரு மாநகரில் தங்கி கட்டிடப்பணிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த பலர் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமையன்று குவியத்தொடங்கினர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகளில் இடம்பிடிக்க முண்டியடுத்துக்கொண்டு நின்ற காட்சிகளை காண முடிந்தது. சமூக விலகலை கடைபிடிக்குமாறு மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதை காற்றில் பறக்கவிட்டப்படி சொந்த ஊர் திரும்புவதிலேயே தொழிலாளர்கள் குறியாக இருந்தனர்.

பெங்களூரில் இருந்து பாகல்கோட்டிற்கு ரூ. 1,311 கட்டணமாகவும், பெல்லாரிக்கு ரூ.884 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. இதேபோல் வட கர்நாடக பகுதிகளான பெலகாவிக்கு பெங்களூரில் இருந்து செல்ல கே எஸ் ஆர் டி சி பேருந்தில் ரூ.1,478 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பிதாருக்கு ரூ.1,984-ம், கலபுருகிக்கி ரூ.1,619-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இது வழக்கமான கட்டணத்தை விட பன்மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம் ஆகும்.

இதேபோல் பெங்களூரில் இருந்து தெற்கு கர்நாடக பகுதிகளான ஹசனுக்கு செல்ல ரூ.538-ம், மைசூருக்கு ரூ.390-ம், சிக்மகளூருக்கு ரூ.695-ம் பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த கட்டண நிர்ணயித்தால் புலம் பெயர் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு திகைப்பும் ஆளாகினர். இருப்பினும் வேறு வழியின்றி அந்த கட்டணத்தை செலுத்தி சொந்த ஊர் சென்று சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் பலரும் புறப்பட்டனர். இதனிடையே 55 பேர் அமரக்கூடிய பேருந்தில் 30 பேரை மட்டுமே கே எஸ் ஆர் டி சி நிர்வாகம் அனுமதித்தது.

பேருந்து கட்டண உயர்வு குறித்து வேதனை தெரிவித்த தொழிலாளி ஒருவர், சர்ஜாபூரில் இருந்து பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்கு நடந்தே வந்ததாகவும், இங்கு வந்து பார்த்தால் பேருந்துக் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். மேலும், கடந்த ஒரு மாதமாக வேலையின்றி இருக்கும் நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை கட்டணமாக எப்படி செலுத்த முடியும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், 500-க்கும் மேற்பட்டோர் கூடியுள்ள நிலையில் பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் கே எஸ் ஆர் டி சி நிர்வாகம் செய்துகொடுக்கவில்லை என புகார் தெரித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications