நெட்வொர்க் இல்லாமல் 8 ஆண்டு தவித்த கிராமம்.. தொடர் போராட்டத்துக்கு கிடைத்தது வெற்றி.. BSNL ஆஃபர்
பெங்களூர்:இந்த காலத்தில் செல்போன் இல்லாத வீடுகளே கிடையாது. ஆனால் இங்கே ஒரு கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த முடியாமல் தவித்து வந்தனர். நெட்வொர்க் வசதி இன்றி பிரச்சனையை எதிர்கொண்டு வந்த மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் தற்போது நிம்மதி கிடைத்துள்ளது. புதிதாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் பிஎஸ்என்எல் டவர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
தற்போது நம் வீட்டில் அதிவேக இண்டர்நெட் வசதிகளை பயன்படுத்தி வருகிறோம். நம் நாட்டில் தற்போது 4ஜி இண்டர்நெட் வசதி கிடைக்கிறது. சில முக்கிய நகரங்களில் 5ஜி இண்டர்நெட் வசதியும் கிடைக்கிறது. மேலும் 5ஜி இண்டர்நெட் வசதி தொடர்ந்து விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இன்னும் கூட பல கிராமங்களில் செல்போன் பேசுவதற்கு கூட நெட்வொர்க் இல்லாத நிலை உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் இண்டர்நெட் வசதியை பயன்படுத்த முடியாமல் தவித்து வந்தனர்.
இந்த பிரச்சனையை எதிர்கொண்ட கிராமம் தான் வாரம்பள்ளி. இந்த கிராமம் கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகாவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நெட்வொர்க் என்பது கிடையாது. விநாயக் பிரபு என்பவர் கடந்த 2017 ம் ஆண்டில் கல்லூரி படிப்பை படித்தார். அப்போது தனது கிராமத்துக்கு பிஎஸ்என்எல் சார்பில் டவர் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதேபோல் இன்னும் பலரும் கடிதம் எழுதியிருந்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடி, அந்த கடிதத்தை டெலிகம்யூனிகேஷன் துறைக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி மோடி சார்பில் விநாயக் பிரபுவிற்கு பதில் கடிதம் கிடைத்தது. இருப்பினும் டவர் அமைக்கும் பணி தொடங்கவில்லை.
அதேபோல், சிவமொக்கா எம்பியாக இருக்கும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா உள்பட பல தலைவர்களுக்கு கடிதம் எழுதினர். கடந்த 8 ஆண்டுகளாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. இதனால் மக்கள் தொடர்ந்து பிரச்சனையை எதிர்கொண்டு வந்தனர்.
குறிப்பாக கொரோனா பரவல் காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்ற வந்த ஊழியர்கள் நெட்வொர்க் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். செல்போன் பேச வேண்டும் இல்லாவிட்டால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்றால் பக்கத்துக்கு கிராமத்துக்கு செல்ல வேண்டிய நிலை தான் இருந்தது. இதனால் தொடர்ந்து மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் தற்போது அந்த கிராமத்துக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது.
8 ஆண்டு தொடர் போராட்டத்துக்கு பிறகு‛யுனிவர்செல் சர்வீஸ் அப்ளிகேஷன் புரோகிராம்' திட்டத்தின் கீழ் டவர் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த டவர் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 கிலோமீட்டர் சுற்றளவில் நெட்வொர்க் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது அவர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. 8 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு கடந்த மே மாதம் பிஎஸ்என்எல் சார்பில் டவர் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது இந்த பணி முடிவுக்கு வந்துள்ளது. இப்போது வாரம்பள்ளி கிராமத்தில் நெட்வொர்க் கிடைக்கிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications