புலி நிறைந்த காட்டில் இரவு முழுதும் தவித்த 2 வயது குழந்தை.. தேடிச்சென்று மீட்ட நாய்.. திக்திக் சம்பவம்
பெங்களூர்: கர்நாடகாவில் டீ எஸ்டேட்டில் மாயமான 2 வயது பெண் குழந்தை புலிகள் நிறைந்த வனப்பகுதிக்குள் நுழைந்தது. அந்த வனப்பகுதியில் ஒரு முழு இரவையும் கழித்த பெண் குழந்தையை 100க்கும் அதிகமானவர்கள் தேடி சென்ற நிலையில் நாய் ஒன்று பத்திரமாக மீட்டு வந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் பி செட்டிகேரி கிராமத்தில் உள்ள டீ எஸ்டேட்டில் சுனில் என்பவர் தனது மனைவி நாகினியுடன் வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த மாதம் 23ம் தேதி பணிக்கு சேர்ந்தனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் சுனன்யா.

டீ எஸ்டேட்டில் உள்ள வீட்டில் தங்கி அவர்கள் பணியாற்றி வந்தனர். சுனில் - நாகினி தம்பதியை போல் அங்கு ஏராளமான எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் தான் மாலை 6 மணியளவில் குழந்தை சுனன்யா, 2 குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தது.
அதன்பிறகு சுனன்யாவுடன் விளையாடிய 2 குழந்தைகள் வீடு திரும்பினர். மாறாக சுனன்யா மாயமானாள். வீட்டுக்கு குழந்தை வராததால் சுனில் - நாகினி தம்பதி அதிர்ச்சியடைந்தனர். இந்த டீ எஸ்டேட்டின் அருகே வனப்பகுதி உள்ளது. அங்கு புலி நடமாட்டம் உள்ளது. இதனால் அவர்கள் அதிகமான பயந்தனர். இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சக தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர்கள் குழந்தையை தேட தொடங்கினர்.
போலீசார், வனத்துறையினரும் வந்துதேடும் பணியை தொடங்கினர். மொத்தம் 100 பேர் குழந்தையை தேடுனர். இந்த தேடுதல் பணியில் 4 நாய்களும் இணைந்தன. அந்த நாய்களும் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டது. இரவு நேரமாகியும் குழந்தை கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய பணி 9.30 மணி வரை நடந்தது. இந்த வேளையில் வனப்பகுதியையொட்டிய பகுதியில் புலியின் கால்தடம் பதிவாகி இருந்தது. அதுமட்டுமின்றி காட்டெருமை செத்து கிடந்தது. இதனால் அவர்கள் பயந்துபோயினர்.
இருப்பினும் தேடுதல் பணியை கைவிடவில்லை. நள்ளிரவை தொடர்ந்த மறுநாள் காலையிலும் தேடும் பணி தொடங்கியது. மறுநாள் காலை 6.30 மணிக்கு ஒரியோ என பெயரிடப்பட்ட நாய் திடீரென்று ஒரு இடத்தில் நின்று குரைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது குழந்தை சுனன்யா இருந்தார். வனப்பகுதிக்கும், டீ எஸ்டேட்டுக்கும் இடையே உள்ள புதரில் குழந்தை கிடைத்தது. இதனால் அனைவரும் ஹேப்பியாகினர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications