இனி தம் அடிச்சா ஆப்பு கன்ஃபார்ம்.. புகைப் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்த கர்நாடக அரசு
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சமீபகாலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொது இடங்களில் புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. புகைப் பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். ஸ்மோக்கிங் காசஸ் கேன்சர் என எழுதிப் போட்டாலும், வாசகங்களை வாசித்தாலும் புகைப் பிடிப்பவர்கள் அதனைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

புகைப்பிடித்தல் அதனைப் பிடிப்பவர்களை மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களின் நுரையீரலையும் பதம் பார்த்துவிடும். பொது இடங்களில் புகைப் பிடிக்க கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை பலரும் மீறியே வருகின்றனர்.
சினிமா தியேட்டர், சாலையோரங்கள், பள்ளி, கல்லூரிகள் முன்பு, பெட்டிக் கடைகள், டீ கடைகள், பேக்கரிகள் என அனைத்துப் பகுதிகளையும் புகைப் பிரியர்கள் ஆக்கிரமித்து வைத்திருப்பார்கள்.
இதில் சிலர் ஒருபடி மேலே போய் பேருந்து, ரயில்கள், இருசக்கர வாகனம், கார், லாரி என எந்த வாகனத்தில் சென்றாலும் அதில் ஆறாம் விரலாய் சிகரெட்டுடன் தான் பயணிக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர் புகையிலைப் பொருள்களை தெரியவந்த நிலையில், அம்மாநில அரசு அவர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் ஒன்றைப் போட்டு அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
இதுகுறித்து, கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: கர்நாடக அரசு அலுவலகங்களில் விதிமுறைகளை மீறி அலுவலக வளாகத்தில் புகைப்பிடிப்பது, புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவது குறித்து அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, அரசுப் பணியாளர்களின் உடல் நலம், பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அரசு அலுவலக வளாகங்களில் புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
புகைப்பிடிக்க கூடாது, புகையிலைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் வைக்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவை மீறி அரசு அலுவலகம் அல்லது அரசு அலுவலக வளாகங்களில் புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா போன்றவற்றை உட்கொள்வது மற்றும் புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications