இருந்ததையும் இழக்கும் பாஜக..ஐதராபாத்-கர்நாடகாவில் மாஸ் காட்டும் காங்கிரஸ்..இந்தியா டுடே எக்ஸிட் போல்
பெங்களூர்: ஐதராபாத் கர்நாடக மண்டலத்தில் காங்கிரஸ் கடந்த முறையை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மக்கள் விறுவிறுப்பாக ஆர்வமுடன் வாக்களித்தனர்.

கர்நாடகவை பொறுத்தவரை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க அங்கு 113 தொகுதிகளை வென்றாக வேண்டும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானாவை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றே கூறியிருந்தன.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்தியா டுடே மண்டல வாரியாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் ஐதரபாத் - கர்நாடக மண்டலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளது. அதாவது காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. பாஜக 7 இடங்களிலும் ஜேடிஎஸ் 01 இடத்திலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 24, பாஜக 15 இடங்களிலும் ஜேடிஎஸ் 04 இடத்திலும் வென்று இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த பகுதி இந்த இடம் என்றாலும் இந்த முறை பாஜக இருக்கும் இடத்தையும் இழக்கும் என கணிப்பு கூறுகிறது. அதேபோல், ஜேடிஎஸ் கட்சிக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications