Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடே என்ன மனுஷன்.. பல ஆயிரம் கோடி இருந்தாலும் இப்போதும் எகானமி கிளாஸ்.. நாராயண மூர்த்தி வாவ் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மும்பை டூ பெங்களூர் விமானத்தில் இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி எகானமி வகுப்பில் பயணித்த படங்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி. இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் இவர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவர். ஐடி துறையில் இந்தியாவின் அசுர பாய்ச்சலுக்கு இவரும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். இவர் எப்போதும் செய்திகளில் இருந்து கொண்டே இருப்பார்.

 Infosys Narayana Murthy travels in Economy Class and Bangalore man shares the Unexpected Encounter

சமீபத்தில் கூட இளைஞர்கள் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னது பேசுபொருளானது. இதற்கிடையே அவர் இப்போது மற்றொரு விஷயத்தில் இணையத்தில் டிரெண்டாகிறார். ஆனால், இந்த முறை பாசிட்டிவான விஷயத்திற்கு.. இது குறித்து நாம் பார்க்கலாம்.

நாராயண மூர்த்தி: மும்பை டூ பெங்களூர் விமானத்தில் இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, எகானமி வகுப்பில் பயணித்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் தான் எப்படி எதிர்பாராத விதமாக நாராயண மூர்த்தியுடன் விமானத்தில் பயணித்தேன் என்பது குறித்த அனுபவத்தைத் தனது லிங்க்ட்இனில் பகிர்ந்துள்ளார்.

பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான நாராயண மூர்த்தி எகானமி வகுப்பில் பயணம் செய்வது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல முறை இவர் எகானமி வகுப்பில் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நரேன் கிருஷ்ணா: பெங்களூரு செல்லும் இந்த விமானத்தில் நாராயண மூர்த்திக்கு அருகே தொழிலதிபர் நரேன் கிருஷ்ணா என்பவர் அமர்ந்து பயணம் செய்தார். பயணத்தின் போது அவர்கள் ஏஐ தொடங்கி இந்தியப் பொருளாதாரம் வரை பல்வேறு தலைப்புகள் குறித்துப் பேசியதாக நரேன் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவரைப் போன்ற ஒருவருடன் பயணிக்கப் போகிறேன் என்பதை வாழ்நாளில் எதிர்பார்த்தே இல்லை என்றும் நரேன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாராயண மூர்த்தி எந்தளவுக்கு இயல்பானவர்.. அணுகக்கூடியவர் என்பதைக் கண்டு வியந்து போனேன்.. நாங்கள் ஒன்றாக இருந்த சில மணிநேரங்களில், வரும் காலத்தில் ஏஐ என்ன செய்யும்.. உலக அளவில் இந்தியப் பொருளாதாரத்தில் இளைஞர்கள் முக்கியப் பங்கு எப்படி இருக்கும். வரும் காலத்தில் நாம் சீனாவை ஓவர்டேக் செய்ய இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் பேசினோம்.

என்ன செய்யணும்: அழுத்தம், தோல்விகள் ஏற்படும் போது அதை வெற்றிக்கு அடிப்படையாக எப்படி மாற்ற வேண்டும் எனப் பல விஷயங்கள் குறித்துப் பேசினார். முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்றார். இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு காலத்தில் இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பெரிய ஒப்பந்தங்கள் நிறைவேறவில்லை என்றும் இருப்பினும் திடீரென ஒரு சமயம் அதைவிடப் பெரிய ஒப்பந்தங்கள் கைகூடி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக அவர் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்தும் பேசினார். பல்வேறு துறைகளில் ஏஐ என்பவை மனித உற்பத்தித்திறனை 10 முதல் 100 வரை உயர்த்தும் என்றார். கடந்த தலைமுறைகளில் வந்த புது கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் பல புதிய கண்டுபிடிப்புகள் வரும் நாட்களில் நடக்கும் என்றார். இப்படி அவர் பல எடுத்துக்காட்டுகளைக் கூறி அனைத்தையும் எளிமையாகப் புரிய வைத்தார். இந்த சந்திப்பை நிச்சயம் நான் அவ்வளவு சீக்கிரம் மறக்கவே மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+