பெங்களூர் இன்போசிஸ் ரெஸ்ட் ரூமில் ரகசிய வீடியோ.. ஐ.டி ஊழியர்களை அதிர வைத்த சம்பவம்! சிக்கிய டெக்கி!
பெங்களூர்: பெங்களூர் இன்போசிஸ் அலுவலகத்தில், ரெஸ்ட் ரூமில் பெண் ஐ.டி ஊழியர்களை ரகசியமாக வீடியோ எடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு வேலை பார்த்து வந்த பெண் ஊழியர் ஒருவர், ரெஸ்ட் ரூமுக்கு அருகில் உள்ள ஒரு அறையில் சந்தேகத்திற்கிடமான ஒரு அசைவை கண்டதாகவும், தான் உடனே அங்கு சென்றபோது ஒரு நபர் தன்னை படமெடுத்து கொண்டிருந்ததை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் அலுவலகத்தில் ரகசியமாக சக ஊழியர் ஒருவர், கழிப்பறையில் பெண்கள் இருக்கும்போது வீடியோ எடுத்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஊழியர் கூச்சலிட்டதும், அந்த இளைஞர், தன்னை மன்னித்து விடுமாறும், இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்றும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கெஞ்சியுள்ளார்.
எனினும், அந்தப் பெண் ஊழியர் சத்தம் போட்டு சக ஊழியர்களை வரவழைத்துள்ளார். மற்ற ஊழியர்கள் உதவியுடன் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து அவரது மொபைல் போனை சோதனை செய்துள்ளனர். அப்போது, அவரது போனில் 30க்கும் மேற்பட்ட ரகசிய வீடியோ காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபரை போலீசாரிடம் தகவல் அளித்து ஒப்படைத்தனர்.

பெண் ஊழியர்கள் கழிப்பறை செல்லும்போது ரகசியமாக வீடியோ எடுத்தவர் ஆந்திராவை சேர்ந்த சுவப்னில் நாகேஷ் மாலி எனத் தெரிய வந்துள்ளது. அவருக்கு வயது 28. இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் ஹெலிக்ஸ் பிரிவில் சீனியர் அசோசியேட் கன்சல்டன்ட் ஆக் பணியாற்றி வந்துள்ளார். உடனடியாக அவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் கழிப்பறையில் இருந்த போது சக ஊழியர் ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் சக ஐடி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களின் பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
"மதம் மாறலைன்னா வேலையை விட்டு தூக்கிடுவோம்.." விப்ரோவில் பெண் ஐடி ஊழியருக்கு மிரட்டல்! என்ன நடந்தது -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
bmw, பென்ஸ் காரில் போறாங்க.. டாக்டர்களுக்கு 5 லட்சம் சம்பளம்.. ஐடி ஊழியருக்கு 30k தான் என குமுறல் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications