‛‛CSK-வை வீழ்த்திய RCB’’.. மைதானத்தில் கர்நாடகா முதல்வர் செய்ததை பாருங்க! ரசிகர்களையே மிஞ்சிட்டாரே
பெங்களூர்: ஐபிஎல்லில் நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டடி வருகின்றன. இந்நிலையில் தான் சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி வென்றதுமே மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்த முதல்வர் சித்தராமையா செய்த சம்பவம் தொடர்பான போட்டோ இணையதளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. தற்பாது ஐபிஎல்லில் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. நேற்றைய தினம் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இடையேயான போட்டி நடந்தது.

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இதில் 4வது அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் போட்டியாக இது அமைந்தது.
இதனால் ஐபிஎல் பைனல் போன்ற பரபரப்பான சூழல் நிலவியது. ஏனென்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. சிஎஸ்கே ஏற்கனவே 14 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் வெல்ல வேண்டும். இல்லாவிட்டால் 18 ரன்களுக்கு குறைவான வித்தியாசத்தில் தோற்க வேண்டும். அப்போது தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் களமிறங்கியது.
அதேபோல் மறுபுறம் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தால் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும். 2வது பேட்டிங் செய்தால் 18.1 ஓவரில் சிஎஸ்கே நிர்ணயிக்கும் இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற சூழல் நிலவியது. இதனால் நேற்றைய சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
நேற்றைய தினம் பெங்களூரில் மழை பெய்தது. ஆனாலும் போட்டி தொடங்கும்போது மழை குறுக்கீடு இல்லை. இதனால் டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சிஎஸ்கே அணி களமிறங்கியது. சிஎஸ்கே அணி போட்டியில் தோற்றாலும் கூட 201 ரன்கள் எடுத்தாலே போதும் பிளேஆஃப் சுற்றுக்கு ரன்ரேட் அடிப்படையில் முன்னேறிவிடும் என்ற நிலையில் பேட்டிங் செய்தனர்.
ஆனால் சிஎஸ்கே அணியால் நேற்றைய தினம் ஆர்சிபியை வெல்ல முடியவில்லை. அதோடு 201 ரன்களையும் எடுக்க முடியவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே அணி எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வென்றது. இதன்மூலம் ஆர்சிபி அணி நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறி உள்ளது. சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் இருந்து வெளியேறி உள்ளது.
இந்த சீசனில் முதல் பாதியில் 7 போட்டிகளில் 6ல் ஆர்சிபி தோற்றது. ஆனால் 2வது பாதியில் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று ஆர்சிபி அணி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் ஆர்சிபியின் வெற்றியை கர்நாடகா முதல்வர் சித்தராமையா கொண்டாடிய போட்டோ இணையதளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது நேற்றைய ஆர்சிபி-சிஎஸ்கே கிரிக்கெட் போட்டியை முதல்வர் சித்தராமையா தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் நேரடியாக பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று பார்த்தார். சித்தராமையாவுடன் அமைச்சர் பரமேஸ்வர், மகாதேவப்பா, சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.
சிஎஸ்கேவை வீழ்த்தி ஆர்சிபி வென்றவுடன் முதல்வர் சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் வெற்றியின் அடையாளமாக 2 விரலை காட்டி சிரித்தபடி போஸ் கொடுத்தார். இந்த போட்டோ தற்போது இணையதளத்தில் பரவி ஆர்சிபி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆர்சிபி வெற்றி பற்றி முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் புகழ்ந்து பேசியுள்ளார்.
அந்த பதிவில் சித்தராமையா, ‛‛தொடர்ந்து 6வது வெற்றி பெற்று நம்ம ஆர்சிபி அணி ப்ளேஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இருந்த அனைவரும் போட்டியின் ஒவ்வொரு மூமெண்ட்டுகளையும் ரசித்து பார்த்தனர். நானும் வரலாற்று வெற்றியை ரசித்து பார்த்தேன். இது ஆர்சிபி அணியின் புதிய அத்தியாயமாகும். இ சாலா கப் நம்தே'' என தெரிவித்துள்ளார்
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications