Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீக் என்ட் ஊருக்கு போன ஐடி ஊழியர்கள் பெங்களூர் திரும்பலாமா? காவிரி பந்த்..ஐடி கம்பெனிகளுக்கு அழைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் செவ்வாய்கிழமை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க ஐடி நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதால், அங்கு பணிபுரியும் தமிழர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கு காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி 5,000 கன அடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதனால் கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்து உள்ளன.

IT companies also invited for Bangalore bandh against release of Cauvery water to Tamil Nadu

பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையில் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தார். இந்த நிலையில், கன்னட அமைப்பினர் பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மண்டியா, தமிழ்நாடு எல்லையான அத்திபள்ளி உள்ளிட்ட இடங்களிலில் தீவிரமான போராட்டங்கள் வெடித்து உள்ளன. இந்த போராட்டத்தில் கர்நாடக விவசாயிகளும் இணைந்து உள்ளனர். இந்த நிலையில் செப்டம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை பெங்களூர் நகரத்தில் பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளன.

இதுகுறித்து பெங்களூர் சுதந்திர பூங்காவில் பேசிய விவசாயி குருபுரு சாந்தகுமார், "காவிரி விவகாரத்தில் வெள்ளையர்கள் காலத்தில் இருந்தே கர்நாடகா விவசாயிகள் மோசமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். இதனை கண்டித்து செவ்வாய்கிழமை பெங்களூரு பந்த் நடைபெறும். காலை 11 மணியளவில் டவுன் ஹால் பகுதியில் இருந்து மைசூர் பேங்க் வரை பேரணி நடைபெறும்." என்றார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தி உள்ள அவர், "இது வெறும் பந்த் அல்ல. கர்நாடக மாநில விவசாயிகளுக்காக பெங்களூர் நகர மக்களின் பந்த் இது. தொழிற்சங்கங்கம், மென்பொருள் நிறுவனங்கள், குடிமக்கள் தாமாக முன்வந்து இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்." என்றார்.

இந்த போராட்டத்துக்கு ஓலா, ஊபர் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளார்கள் சங்க தலைவர் தன்வீர் பாஷாவும் ஆதரவளிப்பதாக தெரிவித்து உள்ளார். எனவே செவ்வாய்கிழமை ஓலா, ஊபர் டாக்சிகள் ஓடாது. அடுத்தடுத்து பல்வேறு போக்குவரத்து சங்கங்களும் இந்த பந்துக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இருப்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலங்களுக்கு செல்பவர்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம்.

பெங்களூர் மாநகரில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் ஏராளமான தமிழர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சனி, ஞாயிறு வார விடுமுறைக்காக ஊருக்கு சென்று இருப்பவர்கள், செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டு இருக்கும் போராட்டம் காரணமாக பாதிக்கப்படலாம். ஆனால், மென்பொருள் நிறுவனங்கள் இந்த பந்த் தொடர்பாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தின் அறிவுறுத்தலை மதிக்காமல் கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. தமிழ்நாடு விவசாயிகள் இதனால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட்டு இருந்தது. ஆனால், கர்நாடக அரசு தொடர்ந்து விடாபிடியாக தமிழ்நாட்டுக்கு நீர் திறக்காமல் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும், மழை காரணமாக திறக்கப்பட்ட உபரிநீரையும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு திறந்துவிடுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சி எம்பிகளுடன் டெல்லி சென்று மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார்.

மறுபக்கம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும், துணை முதலமைச்சர் டிகே சிவகுமாரும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிராக மறுநாளே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சங்கத்தினர் காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடக அரசை கண்டித்தும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+