காபியில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்! வீடியோ காட்டி மிரட்டி பணம், நகை பறித்த கன்னட நடிகர் கைது
பெங்களூர்: பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல் விடுத்ததாக பிரபல கன்னட நடிகர் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஸ்வயம் க்ரிஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு 36 வயது மதிப்புள்ள பெண் ஒருவர் பழக்கம் கிடைத்தது. அவர் சிக்மக்ளூரை சேர்ந்தவர். அவருடன் வீரேந்திர பாபு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு நாள் தனது வீட்டிற்கு வரழைத்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் தன் வீட்டிற்கு வந்ததால் காபி குடிக்காமல் செல்லக் கூடாது என கூறியுள்ளார். இதையடுத்து காபி குடித்த அந்த பெண் மயங்கியுள்ளார்.
இந்த மயக்க நிலையில் அந்த பெண்ணை வீரேந்திர பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த பாலியல் பலாத்காரத்தை வீரேந்திர பாபு செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்த பெண்ணை ஒரு முறை தொடர்பு கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் செல்போனுக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணுக்கு அப்போதுதான் காபியில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீடியோவை ஆன்லைனில் விட்டுவிடுவதாக மிரட்டி மிரட்டியே அவரை பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி பணத்தை கறந்துள்ளார். ரூ 15 லட்சம் வரை வீரந்திர பாபு பணம் பறித்தது தெரியவந்தது. பின்னர் கடந்த ஜூலை 30 ஆம் ஆண்டு அந்த பெண்ணை தொடர்பு கொண்ட வீரேந்திர பாபு, அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். வழியில் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து தங்க நகைகளை பறித்துக் கொண்டு அவரை சாலையில் தள்ளிவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் போலீஸ் நிலையம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக அந்த பெண்ணை சித்ரவதை செய்து வந்த நிலையில் வீரேந்திர பாபுவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பென் டிரைவ், செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆண்டு லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் சீட் வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளையும் போலி வேட்பாளர் பட்டியலையும் கொடுத்ததாகவும் அதன் மூலம் 1.8 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் வீரேந்திர பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications