பெங்களூரில் பயங்கரம்.. சீரியல் நடிகை மீது சந்தேகம்.. பெப்பர் ஸ்பிரே அடித்து கத்தியால் குத்திய கணவர்!
பெங்களூர்: கன்னட சீரியலில் பிரபல நடிகையான மஞ்சுளா ஸ்ருதியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு கணவர் கத்தியால் குத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம் தெரிய வந்துள்ளது. மஞ்சுளா ஸ்ருதியின் கழுத்து, தொடை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமாக முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னட மொழியில் ஒளிபரப்பப்பட்டு வரும் அம்ருதாதாரே உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து வருபவர் மஞ்சுளா ஸ்ருதி. சீரியல்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் 2 நாட்களுக்கு அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பாக அம்ரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ருதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஹனுமந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கின்றனர். சமீப காலமாக ஸ்ருதியின் நடத்தையின் மீது அம்ரேஷ் சந்தேகம் கொண்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே அம்ரேஷ்வை பிரிந்த ஸ்ருதி, அவரின் சகோதரர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இதனிடையே வீடு குத்தகை பணம் தொடர்பாக மீண்டும் சண்டை வந்திருக்கிறது. இதுகுறித்து ஸ்ருதி ஹனுமந்த் நகர் காவல் நிலையத்தில் அம்ரேஷ் மீது புகார் அளித்திருக்கிறார்.
இருப்பினும் இவர்கள் இருவரும் மீண்டும் கடந்த வியாழக் கிழமையன்று மீண்டும் சண்டையை முடித்து இணைந்து வாழ முடிவு செய்திருக்கின்றனர். இதனால் மீண்டும் தனது கணவர் அம்ரேஷ் வசிக்கும் வீட்டிற்கு ஸ்ருதி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதன்பின்னரே அம்ரேஷின் சுயரூபம் வெளியில் வந்துள்ளது.
குழந்தைகள் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற உடன், அம்ரேஷ் அவரின் மனைவி ஸ்ருதியை உடனடியாக கொடூரமாக தாக்க தொடங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஸ்ருதி மீது முதலில் பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி இருக்கிறார். அதன்பின் கத்தியால் தொடை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வீட்டில் சுவற்றில் ஸ்ருதியை தலையை பலமாக மோத வைத்து காயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதன்பின் ஸ்ருதி விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஹனுமந்த் நகர் காவலர்கள் அம்ரேஷை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அதேபோல் ஸ்ருதி - அம்ரேஷ் இடையிலான குடும்ப தகராறு தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications