"ம்மா.. என்னை எரிச்சிடுங்க.. நிறைய அனுபவிச்சிட்டேன்" பிரபல பாடகியின் பகீர் மெசேஜ்.. திடீர் தற்கொலை
கன்னட பாடகி சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
பெங்களூரு: "என் சாவுக்கு காரணம் சரத்குமார்தான்.. அவனை விட்டு வைக்காதீங்க.." என்று தன் கணவன் மீது குற்றஞ்சாட்டி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் பிரபல பின்னணி பாடகி சுஷ்மிதா!
சுஷ்மிதா ராஜன்.. இவருக்கு வயது 26 ஆகிறது.. கன்னட திரைப்படத்தில் பின்னணி பாடகி.. எம்பிஏ படித்துள்ளார். சின்ன வயசில் இருந்தே நல்ல குரல்வளம் இருந்ததால், சினிமாவில் பாடவேண்டுமென்று ஆசையும் இருந்தது.. திறமை, முயற்சி காரணமாக கன்னட சினிமாவில் நுழைந்தார்.. ஏராளமான பாடல்களையும் பாடினார்... இவரது குரலுக்கென்றே ரசிகர் கூட்டமும் உள்ளது.
இந்நிலையில் சுஷ்மிதாவுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.. மாப்பிள்ளை பெயர் சரத்குமார்... சாப்ட்வேர் என்ஜினியர்... கூட்டுக்குடும்பத்தில் சுஷ்மிதா அடியெடுத்து வைக்க.. குடும்பம் சந்தோஷமாகவே சென்றது.

சுஷ்மிதா
சகொஞ்சநாள்தான்.. திடீரென சரத்குமாரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை பிரச்சனையை ஆரம்பித்தனர்... சுஷ்மிதாவை கொடுமைப்படுத்துவதும் துவங்கியது.. இதனால் நொந்துபோன சுஷ்மிதா பெற்றோரிடம் போன் செய்து, இதை பற்றி புலம்புனார்.. கண்ணீர் வடித்தார்... ஆனால் சில வாரங்களாகவே கொடுமை அதிகரித்துவிட்டது.

சகோதரன்
இதனால் பொறுத்து கொள்ள முடியாத சுஷ்மிதா, அன்னபூர்னேஸ்வரிநகர் மாலகாலாவில் உள்ள தன் அம்மா வீட்டிற்கு நேற்று வந்தார்.. சகோதரன், தாயை பார்த்ததும் சுஷ்மிதாவுக்கு நிம்மதி ஏற்பட்டது.. நேற்றெல்லாம் அம்மா, சகோதரன் கையை பிடித்து கொண்டே சுஷ்மிதா பாசமாக பேசிபடியே இருந்தார்.. பிறகு தூக்கம் வருவதாக ரூமுக்கு சென்றுவிட்டார்... ஆனால் விடிந்தும் வெளியே வரவில்லை.

செல்போன்
ஒருவேளை ரொம்ப நேரம் தூங்குவார் போல உள்ளது என்று நினைத்து விட்டுவிட்டனர்.. பிறகு அம்மாவும், சகோதரனும் தங்கள் செல்போனை பார்த்தபிறகுதான், சுஷ்மிதா அதில் தற்கொலை கடிதம் ஒன்றைனை எழுதி அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது.. இதை கண்டு அதிர்ந்த அவர்கள், அதன்பிறகுதான் கதவை உடைதது கொண்டு உள்ளே போனார்கள்.. அங்கே சுஷ்மிதா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்... அதை கண்டு கதறினர்...

விசாரணை
உடனடியாக தகவலறிந்து அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசாரும் விரைந்து வந்தனர்.. சுஷ்மிதா சடலத்தை மீட்டதுடன், சகோதரன், தாயிடம் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான் தங்கள் வாட்ஸ் அப்பிற்கு வந்த தற்கொலை கடிதம் பற்றின மெசேஜை எடுத்து காட்டினர். அதில், "அம்மா என்னை மன்னிச்சிடு.. நான் செய்த தப்புக்கு நானே தண்டனை அனுபவிச்சிட்டேன்.. என் கணவர், அவரது பெரியம்மா வைதேகியின் பேச்சை கேட்டு தொடர்ந்து வரதட்சணை தொல்லை தந்தார்.

ஆதாரங்கள்
கணவனின் சகோதரி கீதாவும் இதற்கு காரணம். இவங்க எல்லாராலும் நான் ரொம்பவும் மன, உடல் ரீதியாக நொந்து போய்ட்டேன்... அவங்க கால்ல விழுந்தும்கூட என்னை விடவில்லை. அந்த வீட்டிலேயே தற்கொலை செய்துக்கலாம்னுதான் நினைச்சேன்.. ஆனால் என்னால் முடியவில்லை... பிறந்த வீட்டில் தற்கொலை செய்தால்தான், முறையான ஆதாரங்கள் கிடைக்கும் என்று நினைத்துதான் இங்க வந்தேன்... என் தற்கொலைக்கு காரணம் அவங்கதான்.

அதிர்ச்சி
அவங்களை சும்மா விட்டுடாதீங்க.. சரியான தண்டனை வாங்கி தந்துடுங்க... நம்ம சொந்த ஊரிலேயே என்னை புதைச்சுடுங்க.. இல்லேன்னா எரிச்சிடுங்க" என்று இருந்தது. இதையடுத்து கணவன் சரத்குமார், பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.. ஆனால் 3 பேரும் எஸ்கேப்.. அவர்களை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.. பிரபல இளம் பின்னணி பாடகியின் இந்த சோக முடிவு கன்னட திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை!












Click it and Unblock the Notifications