61 வயது மூதாட்டியிடம் நடிகை பார்த்த வேலை! செல்போனில் ‘அந்த’ வீடியோ! ஆக்சனில் இறங்கிய போலீஸ்!
பெங்களூர்: பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகையான ஆஷா ஜோயிஸ் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார். ஒரு 61 வயதான மூதாட்டியை மிரட்டியதாகவும், அவரது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திருடி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூர் திலக் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னட சின்னத் திரை உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆயிஷா ஜோயிஸ். கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், 2016 இல் மிஸ் இந்தியா பிளானட் போட்டியிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒரு சில கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் 60 வயது மூதாட்டியை மிரட்டி இரண்டு கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்றதாக அவர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை அளித்தவர் பெயர் பார்வதி.

கன்னட நடிகை
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்வதியை நடிகை ஆஷா சந்தித்துள்ளார். அப்போது தான் ஷ்ரிங்கேரி ஷாரதா பீத் ஜோயிஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், தொலைக்காட்சி நடிகை எனக்கூறி பேசி இருக்கிறார். தொடர்ந்து தனிமையில் இருந்த பார்வதி இடம் பேச்சு கொடுத்த அவர் 60 வயதானாலும் இளமையாக இருக்கிறீர்கள், உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எனக் கூறி அவரது புகைப்படங்களை வாங்கி இருக்கிறார்.
நடிகை ஆஷா ஜோயிஸ்
இந்த நிலையில் நல்ல மணமகன் தேவை என்றால் உங்களது அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் வேண்டும் என கூறி அவரது செல்போனில் இருந்து வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு தெரிந்தவர் தொழில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு பணம் வேண்டும் என ஆஷா அந்த மூதாட்டி இடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அவரது அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என கூறி இருக்கிறார்.
வயதான பெண்மணி
இருந்த போதும் அவர் பணம் தர மறுத்ததால் ஆஷா ஜோய்ஸ் அந்தப் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வீடியோக்களை பிறருக்கு அனுப்பியதோடு சமூக வலைதளத்திலும் வெளியிட்டிருக்கிறார். மேலும் சில புகைப்படங்களை மட்டுமே தற்போது வெளியிட்டு இருப்பதாகவும் கூடுதலாக பணம் தராவிட்டால் அனைத்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
பெங்களூர் போலீஸ்
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திலக் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சைபர் க்ரைம் நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் எங்கிருந்து வெளியிடப்பட்டது? யார் யார் பகிர்ந்தனர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தன் மீதான வழக்கு குறித்து ஆஷா எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இதற்கிடையே அவரிடம் எப்போது வேண்டுமானாலும் ஆஷா ஜோயிஸிடம் போலீசார் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது. இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு பிரபல நடிகை மூதாட்டியை மிரட்டியதாக எழுந்துள்ள புகார் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications