கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. எடியூரப்பா, குமாரசாமி பங்கேற்பு
பெங்களூரு: காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
கர்நாடகம்-தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதில் வறட்சி காலங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. ஜூன் மாதமும் ஆகஸ்ட் மாதமும் மழை சரியாக பெய்யவில்லை. ஜூலையில் மட்டுமே ஓரளவு மழை பெய்துள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட்டு மாதம் தமிழகத்திற்கு 52 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் நீர் குறைவான அளவே இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
தற்போது உள்ள 54 டிஎம்சி நீரை வைத்து பெங்களூரு, மண்டியா, மைசூரு, ராமநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே முடியாது இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததை தொடர்ந்து கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டது.
ஆனால் இந்த நீர் போதாது எனவும், கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 52 டி.எம்.சி. நீரை திறக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த 14-ந் தேதி வழக்கு தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 6 நாட்களாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக் கும் மேல் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது தண்ணீர் திறப்பு 13 ஆயிரம் கனஅடி என்கிற அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசியல் கட்சியினர், விவசாய மற்றும் கன்னட அமைப்பினா் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தண்ணீர் திறந்துவிடும் கர்நாடாக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மண்டியா மாவட்டத்தில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன.

போதிய மழை பெய்யாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி தண்ணீர் திறக்கக்கூடாது என்று கர்நாடா எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. கர்நாடக விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்பதால், தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது என்றும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் வலியுறுத்துகின்றன. இதனிடையே தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பது குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் 23-ந் தேதி நடைபெறும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்தார். அதன்படி கா்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நடந்தது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள், பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினையில் பிரச்சனையில் பிரதமரை சந்தித்து முறையிலாம் என்று முடிவு செய்தனர். மேலும் கர்நாடகா அரசு எடுக்கும் முடிவினை ஆதரிப்பது என்றும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன
இதனிடையே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அமர்வில் அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின்போது கர்நாடகம் சார்பில் எந்த மாதிரியான அம்சங்களை எடுத்து வைப்பது என்பது குறித்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
#WATCH | Karnataka | An all-party meeting called at Vidhana Soudha in Bengaluru to discuss the Cauvery River water dispute.
— ANI (@ANI) August 23, 2023
CM Siddaramaiah, Deputy CM DK Shivakumar, former Chief Minister & BJP leader BS Yediyurappa, JD(S) leader HD Kumaraswamy, BJP MP Tejasvi Surya, Lok Sabha… pic.twitter.com/XiPj9l04fJ












Click it and Unblock the Notifications