கர்நாடகா தேர்தல்: தேவகவுடா குடும்பத்தின் ஜேடிஎஸ் எதிர்காலம் என்ன? மீண்டும் கிங்மேக்கர் சாத்தியமா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் மதச் சார்பற்ற ஜனதா தளம் (JDS ஜேடிஎஸ்) எத்தனை இடங்களப் பெறப் போகிறது? ஜேடிஎஸ் இந்த தேர்தலிலும் கிங்மேக்கராகவே உருவெடுக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கர்நாடகாவைப் பொறுத்தவரையில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகியவைதான் பிரதான கட்சிகள். இந்த மூன்று கட்சிகளுமே இம்முறை அதிக இடங்களை கைப்பற்றுவதில் முனைப்பாக இருக்கிறது.
2018-ம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 108 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 80; ஜேடிஎஸ் 37 இடங்களில் வென்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதலில் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் பாஜகவால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதன் பின்னர் ஜேடிஎஸ்- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணி ஆட்சியும் ஓராண்டுதான் நீடித்தது. ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்ததால் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தது.
கர்நாடகாவைப் பொறுத்தவரையில் 1999-ம் ஆண்டு ஜேடிஎஸ் கட்சி உருவானது முதலே சொந்த பலத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது இல்லை. 2006-ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து 20 மாதங்கள் ஆட்சியில் இருந்தது ஜேடிஎஸ்; 2018-ம் ஆண்டில் 14 மாதங்கள் ஜேடிஎஸ் அதிகாரத்தில் இருந்தது. ஆனால் இந்த முறை ஜேடிஎஸ் கட்சி 123 இடங்களைப் பெறப் போவதாக இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதாவது மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சி தனித்தே 123 இடங்களை பெற முயற்சிக்கிறதாம். இது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது கர்நாடகா அரசியலை அறிந்தவர்களுக்கு தெரிந்த ஆணித்தரமான உண்மையும் கூட.
கர்நாடகாவில் 2004-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜேடிஎஸ் 58 இடங்களில் வென்றது; 2013-ம் ஆண்டு 43 இடங்களில் வென்றது. கர்நாடகா தேர்தல் வரலாற்றில் ஜேடிஎஸ் அதிகமாக இடங்களைப் பெற்றது இந்த இருமுறை மட்டும்தான். இம்மாநிலத்தில் ஜேடிஎஸ் கட்சிக்கு 18%-20% வாக்கு உள்ளது. குறிப்பாக பழைய மைசூர் பிராந்தியம் எனப்படுகிற ஒக்கலிகா கவுடாக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் தொகுதிகளில் மட்டுமே கணிசமான இடங்களை ஜேடிஎஸ் பெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் ஜேடிஎஸ் 37 இடங்களில் வென்றது.
ஜேடிஎஸ் கட்சியின் பலம் என்பவை ஒக்கலிகா கவுடா வாக்குகள்; கன்னடர்களின் கட்சி; விவசாயிகளுடன் இணைந்த ஏழைகளுக்கான கட்சி; பாஜக அல்லது காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளில் ஒன்றுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வல்லமை பெற்றது ஆகியவற்றை சொல்லலாம்.
ஆனால் குடும்ப கட்சி; வாரிசு அரசியல்; ஒக்கலிகா கவுடாக்கள் இல்லாத பகுதிகளில் காலூன்றவே முடியாத நிலை; சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க முடியாதது; ஜேடிஎஸ் நிறுவனர் தேவகவுடா ஆக்டிவ் அரசியலில் இல்லாதது ஆகியவை அக்கட்சியின் பலவீனங்களாக சொல்லலாம்.
கர்நாடகா தேர்தலில் இம்முறையும் தொங்கு சட்டசபை உருவாகி, ஜேடிஎஸ் கணிசமான இடங்களைப் பெற்றால் முதல்வர் பதவி தாமாக தேடி வரும் என்பது யதார்த்தமானது.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் ஜேடிஎஸ் கட்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவகுமார், ஒக்கலிகா கவுடா ஜாதியை சேர்ந்தவர். இதனால் ஒக்கலிகா கவுடாக்கள் ஆதரவு காங்கிரஸ் பக்கம் அலை அலையாக திரும்பி இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இது ஜேடிஎஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடவையும் தரக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!












Click it and Unblock the Notifications