கர்நாடகா: குமாரசாமிக்கு குடைச்சல்! ஹாசன் தொகுதி தரலைன்னா.. மிரட்டும் 'அண்ணி'- நாளை க்ளைமாக்ஸ்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜேடிஎஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. தேவகவுடா குடும்பத்தின் கோட்டையான ஹாசன் தொகுதி வேட்பாளர் யார் என்பதை முன்வைத்து பெரும் புயல் வீசக் காத்திருக்கிறது என்கின்றன தகவல்கள்.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கர்நாடகாவில் ஆளும் பாஜக எந்தநேரத்திலும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடக் கூடும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல ஜேடிஎஸ் கட்சியும் 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. புதியதாக களத்தில் இறங்கி இருக்கும் ஆம் ஆத்மியும் 2 கட்டமாக வேட்பாளர்களை வெளியிட்டுள்ளது.
ஜேடிஎஸ் கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. இதில் தேவகவுடா குடும்பத்தின் கோட்டையான ஹாசன் தொகுதி வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஹாசன் தொகுதியில் எப்போதும் ஜேடிஎஸ் ஜெயிப்பது வழக்கம். 2018-ம் ஆண்டு ஹாசன் எனும் கோட்டையை பாஜகவிடம் பறிகொடுத்தது தேவகுடும்பா குடும்பம்.
ஆகையால் இழந்த ஹாசன் எனும் கோட்டையை மீட்க நானே களமிறங்குகிறேன் என்கிறார் தேவகவுடாவின் மூத்த மருமகள் பவானி. தேவ கவுடாவின் மகன்களில் ஒருவரான ரேவண்ணாவின் மனைவிதான் பவானி. முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணி பவானி. அவரது மகன் பிரஜ்வால் ரேவண்ணா எம்பியாக உள்ளார்; மற்றொரு மகன் சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சியாக உள்ளார். இந்த முறை தாமே ஹாசன் தொகுதியில் போட்டியிடுவேன் என கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பிரசாரமும் செய்து வருகிறார் பவானி. ஒருவேளை ஹாசன் தொகுதியில் தமக்கு போட்டியிட வாய்ப்பு தராவிட்டால் சுயேட்சையாகவே போட்டியிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார் அண்ணியார் பவானி.
ஆனால் குமாரசாமி தரப்பு இதை ஏற்க மறுக்கிறது. ஹாசன் தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து பாஜகவிடம் தோற்றவர் ஹெ.எஸ்.பிரகாஷ். 2018 சட்டசபை தேர்தலுக்குப் பின் பிரகாஷ் காலமாகிவிட்டார். அவரது மகன் ஸ்வரூப்புக்கு ஹாசன் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கலாம் என நினைக்கிறதாம் குமாரசாமி தரப்பு.
இப்படி தேவகவுடாவின் மூத்த மருமகள் ஒருபக்கம்; அண்ணிக்கு எதிராக குமாரசாமி ஒரு பக்கம் என குடும்பத்தில் வெட்டு குத்து நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் நாளை ஜேடிஎஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications