கர்நாடகா சட்டசபை தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிப்பு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு மீதான பரிசீலனையின் போது ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அது போல் அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுவிட்டது.
கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடக்கிறது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கர்நாடகாவில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜேடியூ, அதிமுக எடப்பாடி அணி , அதிமுக ஓபிஎஸ் அணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நேற்று பிற்பகல் 3 மணியுடன் கால அவகாசம் முடிந்தது. வேட்புமனுக்கள் மீது இன்றைய தினம் பரிசீலனை செய்யப்பட்டது. 224 தொகுதிகளுக்கு 3632 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களுள் 3327 ஆண்கள், 304 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3632 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24 ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவர்கள் மூவரும் புலிகேசி நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வேட்புமனுக்களில் தவறு இருப்பதாக கூறி தேர்தல் அதிகாரிகள் அவற்றை நிராகரித்தனர்.
அது போல் புலிகேசி நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் அங்கீகரித்தது. அது போல் அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து நெடுஞ்செழியன் என்பவரை ஓபிஎஸ் வேட்பாளராக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கோலார் தங்க வயல் தொகுதிக்கு அனந்தராஜையும் காந்தி நகர் தொகுதிக்கு குமாரையும் வேட்பாளர்களாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த மூவரது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் 5,21,73,579 பேராகும். அவர்களில் ஆண்கள் 2.62 கோடியும், பெண் வாக்காளர்கள் 2.59 கோடியும் உள்ளனர். தேர்தலில் மக்கள் வாக்களிக்க வசதியாக 58,282 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் நகர்ப்புற வாக்குச் சாவடிகள் 20,886 ஆகும். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் பட்டியலின வேட்பாளர்களுக்கும் 15 தொகுதிகள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டன. மாநிலத்தில் 80 வயதுக்குள் மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.15 லட்சம் ஆகும். இது கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட 32 சதவீதம் அதிகமாகும்.
இவர்களில் 16,796 வாக்காளர்கள் 100 வயதை எட்டியவர்கள், 100 வயதை கடந்தவர்கள். மாற்றுத்திறனாளிகள் 5.55 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்களிக்க 9.17 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். 2023 ஏப்ரல் 1 ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களிலும் ஜேடிஸ் 37 இடங்களிலும் வென்றன. பாஜக ஆட்சி அமைக்க வரக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் அதிக தொகுதிகளை பெற்றாலும் ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக தெரிவித்தது. அதன்படி குமாரசாமி முதல்வரானார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவலால் குமாரசாமி ஆட்சி கலைந்தது.
அதன்பின்னர் எடியூரப்பா முதல்வரானார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் வயது வரம்பு தகுதி அடிப்படையில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகிறது.
-
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications