கர்நாடகாவில் 140 தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி.. உள்கட்சி சர்வே முடிவு இதுதான்.. பகிர்ந்த டிகேசி
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பாக, பாஜக, கட்சிகள் உள்கட்சி சர்வேக்கள் மேற்கொண்டு வருகின்றன.
பெங்களூர்: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் உள்கட்சி சர்வே முடிவுகளை மேற்கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளவர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் தான் உள்கட்சி சர்வேயில் முதலில் 134 இடங்களிலும் தற்போதைய நிலையில் 140 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது தெரியவந்துள்ளதாம். இதுதொடர்பான முக்கிய தகவலை அக்கட்சியே தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. 5 ஆண்டு ஆட்சி முடிய உள்ளது.
இதனால் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடகா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

நான்குமுனை போட்டி
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அங்கு ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் புதிய வரவாக ஆம்ஆத்மி கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் நான்குமுனை போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வேக்களால் காங்கிரஸ் உற்சாகம்
இந்நிலையில் தான் தேர்தல் தொடர்பாக மாநிலத்தில் பல்வேறு சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான சர்வேக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. அதாவது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகும். காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிக இடங்களில் வெல்லும் எனவும், இன்னும் வேட்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்தினால் தனித்து ஆட்சியை பிடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளன. இது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

140 இடங்களில் வெற்றியாம்
மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்கட்சி சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதிலும் அக்கட்சிக்கு பாசிட்டவான தகவல் தான் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸின் உள்கட்சி சர்வேயின் முக்கிய விஷயத்தை அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகேசிவக்குமார் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛தேர்தல் தொடர்பாக உள்கட்சி சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் முதலில் 136 இடங்களில் வெற்றி பெறுவதாக முடிவுகள் வந்தன. தற்போது இநு்த தொகுதிகளின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்னள. கர்நாடகாவில் மாற்றம் என்பது துவங்கி உள்ளது'' என்றார்.

இறுதியில் நிலவரம் மாறுமா?
டிகே சிவக்குமார் இப்படி கூறினாலும் கூட பாஜகவின் உள்கட்சி சர்வே உள்பட பிற சர்வேக்கள் என்பது மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. தொங்கு சட்டசபை தான் உருவாகும். காங்கிரஸ் கட்சிக்கு 100க்கும் அதிக இடங்களிலும் பாஜக 90 முதல் 100 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளன. மேலும் தற்போது கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கர்நாடகா சென்று வருகின்றனர். பிரதமர் மோடி புதிய திட்டங்களை துவங்கி வைக்கும் நிலையில் அமித்ஷா சர்வேக்களில் மைனஸாக உள்ளவற்றை பிளஸாக மாற்றுவதற்கான தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கிறார். இது பாஜகவுக்கு பலமாக மாறலாம். ஏனென்றால் பல மாநிலங்களில் இதனை பாஜக நிகழ்த்தி காட்டி உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டியது அவசியம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications