பயங்கர ட்விஸ்ட்! கிங் மேக்கர் குமாரசாமி! கர்நாடகாவில் ஒடுங்கும் பாஜக - காங்கிரஸ்! ரிபப்ளிக் கணிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. அங்கே மதசார்பற்ற ஜனதா தளம்.. அதாவது ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்று ரீ பப்ளிக் - பி மார்க்யூ எக்சிட் போல் கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
கர்நாடக சட்டசபை என்பது தமிழ்நாடு சட்டசபை போல கிடையாது. தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை அரிதாக நடக்கும் நிகழ்வு. ஆனால் கர்நாடகாவில் கடந்த 20 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி இருக்கிறது.

அங்கே மூன்று கட்சிகள் பிரதான கட்சிகள். காங்கிரஸ்.. பாஜக.. ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம். இந்த மூன்று கட்சிகள் அங்கே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும். இவர்கள் இடையே வாக்குகள் பிரிவதால், அங்கே ஜாதி ரீதியாக பெரிய அளவில் வாக்குகள் பிரிவதாலும் தேர்தல் முடிவுகளில் அடிக்கடி தொங்கு சட்டசபை உருவாகும்.
தொங்கு சட்டசபை: இந்த நிலையில்தான் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. அங்கே மதசார்பற்ற ஜனதா தளம்.. அதாவது ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்று ரீ பப்ளிக் - பி மார்க்யூ எக்சிட் போல் கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
இதில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சம் 108 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதனால் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ் அங்கே 94-108 இடங்களை வெல்லும்.
பாஜக 85-100 இடங்களில் வெல்லும் என்று ரீ பப்ளிக் - பி மார்க்யூ எக்சிட் போல் தெரிவித்து உள்ளது.
அதேபோல் ஜேடிஎஸ் 24- 32 இடங்களை வெல்லும் என்று ரீ பப்ளிக் - பி மார்க்யூ எக்சிட் போல் கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.
இதனால் அங்கே ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு தேவை என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
மற்ற கட்சிகள் அங்கே 2-6 இடங்களை வெல்லும் என்று ரீ பப்ளிக் - பி மார்க்யூ கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டு உள்ளது.

பின்னணி: கர்நாடகாவில் பொதுவாக பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதான கட்சிகள். மதசார்பற்ற ஜனதா தளம் இதில் 3வது பெரிய கட்சி. 40 க்கும் குறைவான இடங்களை எடுக்க கூடிய கட்சி என்றாலும் தொங்கு சட்டசபை உருவாகும் போது மதசார்பற்ற ஜனதா தளம்தான் ஆட்சியை தீர்மானிப்பார்கள்.
இந்த நிலையில்தான் கர்நாடகாவில் இந்த முறை கூட்டணி இன்றி மூன்று கட்சிகளும் தனி தனியாக போட்டியிடுகின்றன . தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிகள் அங்கே அமைய வாய்ப்புகளும் உள்ளன.
கர்நாடகாவில் கடந்த 19 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதில் 2004 தொங்கு சட்டசபை, 2008 தொங்கு சட்டசபை, 2018 தொங்கு சட்டசபைகள் முக்கியமானது ஆகும். அதிலும் கடந்த தேர்தலுக்கு பின் அங்கே 3 முறை முதல்வர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications