வாஷ் அவுட்.. 150+.. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி.. பாஜக காலி! இவங்க இவ்வளவு நம்பிக்கையா சொல்றாங்களே?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் கூட அவர்கள் புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை 66 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. இப்போது வரிசையில் நிற்பவர்கள் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கும். 7 மணி அளவில் முழுமையான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வரும்.

Karnataka Assembly Election Exit Poll: Congress hope for a massive 150 plus seats win against BJP

சுமார் 70 சதவிகிதம் வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடந்துள்ளது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்:

இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையாக தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி 150க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் இளம் தேசிய நிர்வாகி ஸ்ரீவஸ்தா செய்துள்ள போஸ்டில், வாக்குச்சாவடி சாவடி பணியாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களிடமிருந்து வரும் கருத்துகளின்படி

பழைய மைசூரு பகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெரும்.
கல்யாண கர்நாடகா - காங்கிரஸ் கிளீன் வெற்றி
கித்தூர் கர்நாடகா - 50:50
மத்திய கர்நாடகா - காங்கிரஸ் கிளீன் வெற்றி
பெங்களூரு மண்டலம் - 50:50 வாய்ப்பு உள்ளது.

Karnataka Assembly Election Exit Poll: Congress hope for a massive 150 plus seats win against BJP

காங்கிரஸ் அமோக வெற்றி பெற போகிறது. கடந்த ஒரு மணி நேரத்தில் அதிக வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக்க அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கடுமையாக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைவோம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் செய்துள்ள போஸ்டில், காங்கிரஸ் கட்சி 153 இடங்களில் வெல்லும். இதில் இருந்து 4 இடங்கள் கூடுதலாக அல்லது 4 இடங்கள் குறைவாக காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளார் .

காங்கிரஸ் கட்சி இவ்வளவு நம்பிக்கையாக இருப்பது கர்நாடகாவில் கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார்.

ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்த காரணத்தால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அதாவது 5 வருடத்தில் 3 முதல்வர்கள் அங்கே ஆட்சி வகித்தனர். 4 முறை பதவி ஏற்பு விழாக்கள் மட்டும் நடந்தன. கடந்த வருடம் போல இந்த வருடம் தொங்கு சட்டசபை உருவாகுமா அல்லது தனி ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+