போச்சு.. கர்நாடகாவில் "இவங்க" 2 பேர் சேர்ந்தாதான் ஆட்சி அமைக்க முடியும்! டிவி 9 - சி வோட்டர் கணிப்பு
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை நிலவும் என்று டிவி 9 - சி வோட்டர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சம் 112 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
1 மாதமாக நடந்த பிரச்சாரம்.. காரசார விவாதம்.. அரசியல் மோதல்கள் எல்லாம் கர்நாடகாவில் முடிவிற்கு வந்துள்ளது. திருவிழாவிற்கு இணையாக கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை நிலவும் என்று டிவி 9 - சி வோட்டர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

இதில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சம் 112 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதனால் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க முடியாது,
பாஜக 83-95 இடங்களில் வெல்லும் என்று டிவி 9 - சி வோட்டர் எக்சிட் போல் தெரிவித்து உள்ளது.
அதேபோல் ஜேடிஎஸ் 21- 29 இடங்களை வெல்லும் என்று டிவி 9 - சி வோட்டர் எக்சிட் போல் கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது.
இதனால் அங்கே ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு தேவை என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
மற்ற கட்சிகள் அங்கே 2-6 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை 66 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. இப்போது வரிசையில் நிற்பவர்கள் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கும். 7 மணி அளவில் முழுமையான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வரும்.

சுமார் 70 சதவிகிதம் வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடந்துள்ளது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தொங்கு சட்டசபை: இதனால் கர்நாடகாவில் மீண்டும் தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார்.
ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்த காரணத்தால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
அதாவது 5 வருடத்தில் 3 முதல்வர்கள் அங்கே ஆட்சி வகித்தனர். 4 முறை பதவி ஏற்பு விழாக்கள் மட்டும் நடந்தன. கடந்த வருடம் போல இந்த வருடம் தொங்கு சட்டசபை உருவாகுமா அல்லது தனி ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications