மிரளும் அமித்ஷா.. கனகபுராவில் டிகே சிவக்குமார் அமோக வெற்றி! பாஜக அமைச்சர் அசோக்கின் டெபாசிட் காலி
பெங்களூர்: பாஜகவின் அரசியல் சாணக்கியராக வலம்வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே பல சந்தர்ப்பங்களில் திணறவிடும் டிகே சிவக்குமார் கர்நாடகா சட்டசபை தேர்தலில் கனகபுரா தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்ய வைத்ததோடு 1.22 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். குறிப்பாக பாஜக அமைச்சர் ஆர் அசோக் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 73 சதவீதம் ஓட்டு பதிவானது. இந்நிலையில் தான் இன்று காலை துவங்கி நடந்தது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் பாஜக ஆட்சியை தக்கவைக்குமா? இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அரியணை ஏறுமா? இல்லாவிட்டால் தொங்கு சட்டசபை உருவாகி ஜேடிஎஸ் கட்சி முதல்வர் பதவியை தட்டிச்செல்லுமா? என்ற கேள்வி எழுந்தது.

கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் ஜெயிக்கலாம் எனவும், தொங்கு சட்டசபை உருவாக தான் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. ஆனால் காங்கிரஸ், பாஜக கட்சிகள் கருத்து கணிப்புகளை நம்பவில்லை.
தனிமெஜாரிட்டியுடன் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைப்போம் என பாஜகவினரும், 113க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் கூறினர். இறுதியாக கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 136 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில் பாஜக படுதோல்வியடைந்தது.
மேலும் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் அமோக வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 ஆகிய 3 தேர்தல்களில் அவர் வெற்றி பெற்ற நிலையில் 4வது முறையாக இன்று வாகை கூடினார். இது அவரது கோட்டை என்றே கூறலாம். இந்நிலையில் தான் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ள டிகே சிவக்குமார் தற்பாது வென்றுள்ளார்.
டிகே சிவக்குமார் என்பவர் காங்கிரஸ் கட்சியை பல சந்தர்ப்பங்களில் ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜக கவர முயன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை கர்நாடகாவில் ரெசார்ட்டில் பாதுகாப்பாக தங்க வைத்து முறையாக அனுப்பி வைத்த பெருமை டிகே சிவக்குமாரையே சேரும். இவ்வாறு அமித்ஷாவையே அவர் அலறவிட்டுள்ளார்.
இதனால் தான் இந்த முறை டிகே சிவக்குமாரை எதிர்த்து ராமநகர் மாவட்டத்துக்கு வெளியே இருந்து பாஜகவின் மூத்த தலைவரும் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர் அசோக்கை பாஜக களமிறக்கியது. கனகபுரா தொகுதியை பொறுத்தமட்டில் ஒக்கலிகர் வாக்குகள் தான் அதிகம். டிகே சிவக்குமாரும், ஆர் அசோக்கும் ஒக்கலிகர் என்பதால் ஓட்டுகள் பிரியலாம். இதன்மூலம் டிகே சிவக்குமாரை, வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து தான் ஆர் அசோக்கை இங்கு களமிறக்கியது.
கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமாரை வீழ்த்துவது என்பது சற்று கடினம் என்பதால் தான் ஆர் அசோக் தனது சொந்த தொகுதியும், தற்போது எம்எல்ஏவாக உள்ள பெங்களூர் பத்மநாபநகரிலும் போட்டியிட்டார். இதில் பத்மநாபநகரில் வெற்றி பெற்ற அசோக், கனகபுராவில் டெபாசிட்டை இழந்தார்.
கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமார் 1 லட்சத்து 43 ஆயிரத்து 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக ஜேடிஎஸ் கட்சிியன் நாகராஜூ 20,631 ஓட்டுகள் பெற்று 2வது இடம் பிடித்தார். இதனால் 1 லட்சத்து 22 ஆயிரத்து 392 ஓட்டுகள் வித்தியாசத்தில் டிகே சிவக்குமார் அமோக வெற்றி பெற்றார். பாஜகவின் ஆர் அசோக் 19,753 ஓட்டுகள் மட்டுமே பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் டிகே சிவக்குமாரை எதிர்த்த போட்டியிட்ட அனைவருக்கு டெபாசிட் போனது.
ஓல்டு மைசூர் மாவட்டங்களில் ஒன்றாக ராமநகரில் தான் கனகபுரா தொகுதி உள்ளது. இங்கு பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. கடந்த 2008, 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் அதிகபட்சமாக பெற்ற வாக்குகள் என்றால் 6,273 தான். அதுவும் கடந்த 2018 தேர்தலில் பாஜக வேட்பாளர் நந்தினி கவுடா தான் பெற்றார். இத்தகைய சூழலில் தான் ஆர்.அசோக் இந்த தொகுதியில் போட்டியிட்டு கொஞ்சம் அதிகமாக வாக்குகள் பெற்று 19,753 ஓட்டுகளுடன் படுதோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆர் அசோக் இந்த தொகுதியில் டிகே சிவக்குமாரை வீழ்த்த முடியாது என்றே கூறப்பட்டது. ஏனென்றால் பாஜகவில் லிங்காயத் (எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சமுதாயம்) சமுதாயத்தை சேர்ந்தவருக்கு தான் முதல்வர் பதவி வழங்கப்படும். ஒக்கலிகர் சமுதாயத்துக்கு முதல்வர் பதவி வழங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக தான் உள்ளது. ஆனால் காங்கிரஸில் நிலைமை அப்படியில்லை. காங்கிரஸ் வெற்றி பெற்றால் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில் டிகே சிவக்குமாருக்கு தான் அங்குள்ள மக்கள் ஓட்டளிக்க வாய்ப்புள்ளது எனவும், ஆர் அசோக் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர், டிகே சிவக்குமார் தான் மண்ணின் மைந்தன் என்ற நினைப்பும் கனகபுரா தொகுதி மக்களிடம் உள்ளதாக களநிலவரம் கூறியது. இதனால் டிகே சிவக்குமாரின் கோட்டையான கனகபுராவில் அவரை தோற்கடிப்பது என்பது பாஜக அமைச்சர் ஆர் அசோக்கிற்கு சிரமமான காரியமாக இருக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில் அது அப்படியே நடந்துள்ளது. டிகே சிவக்குமாருக்கு எதிரான பாஜகவின் வியூகம் புஷ்வானமாகி கொஞ்சம் கூட எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications