கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும்.. பாஜகவுக்கு எவ்வளவு சீட்? ABP-CVoter கருத்துக்கணிப்பு ரிசல்ட்!
பெங்களூர் : கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ், 224 தொகுதிகளில் 115-127 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக,68-80 தொகுதிகளில் வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவுகளைக் காட்டி வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா தேர்தல்
224 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20ஆம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி நடந்து அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மே 10ஆம் தேதி பதிவான வாக்குகள் அனைத்தும் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவித்து தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி முடுக்கிவிட்டுள்ளது. கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியில் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏபிபி - சி வோட்டர்
ABP - CVoter இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிகாகியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ், 224 தொகுதிகளில் 115-127 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக,68-80 தொகுதிகளில் வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மூன்றாவது முக்கிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம், 23-35 தொகுதிகளில் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது.

தனிப்பெரும்பான்மை
கடந்த தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வந்த நிலையில், அதற்கு நேர்மாறான தகவல்கள் இந்த ஏபிபி - சி.வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளது.115க்கும் அதிகமான இடங்களைப் பிடித்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என இந்தக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications