Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா பந்த் பெங்களூரில் எப்படி இருக்கு? எந்தெந்த சேவைகள் இல்லை? நோட் பண்ணுங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்பினர் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த பந்த் போராட்டம் காலையிலேயே பிசுபிசுத்துப்போனது. பெங்களூரில் பந்த் எப்படி இருக்கு? எந்தெந்த சேவைகள் உள்ளது? எந்தெந்த சேவைகள் இல்லை? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா எல்லையில் பெலகாவி அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சில் பெலகாவியில் இருந்து பாலேகுந்திரி என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பெண் ஒருவர் மராத்தியில் பேசி டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரி, ‛‛எனக்கு மராத்தி மொழி தெரியாது. கன்னடத்தில் பேசுங்கள்'' என்று கூறினார்.

Karnataka Bandh Karnataka Bangalore

இது பிரச்சனையை ஏற்படுத்தியது. அப்போது மராத்தி மொழி பேசுவோர் கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரியை தாக்கினர். இதனை கன்னட அமைப்பினர் கண்டித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் இந்த பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

பெலகாவியில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி, சிவசேனா உள்ளிட்ட மகாராஷ்டிரா அமைப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பிரதான கோரிக்கையாக உள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் கன்னட மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கன்னட அமைப்பினர் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய பந்த் போராட்டம் இன்று மாலை 6 மணி வரை 12 மணிநேரம் நடைபெற உள்ளது. இந்த பந்த் போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இன்று காலை 7 மணி நிலவரப்படி பெங்களூர் மாநகர அரசு பேருந்தான பிஎம்டிசி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. அதேபோல் தமிழகம் - கர்நாடகா இடையே பஸ் சேவைகள் வழக்கம்போல் உள்ளது.

ஓலா, உபர் உள்பட பல வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் குறைந்த அளவில் அந்த வாகனங்கள் இயங்கி வருகிறது. அதேபோல் ஹோட்டல்கள் குறைந்த அளவில் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எதுவும் விடப்படவில்லை. மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. அதேபோல் ரயில் நிலையங்களில் ரயில்கள் இயங்கி வருகின்றன. பஸ், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெங்களூர் கேஆர் மார்க்கெட்டில் வழக்கம்போல் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் காலை முதல் மதியம் வரை மட்டும் திரைப்படம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல இடங்களில் மக்கள் பந்துக்கு ஆதரவு கொடுக்காமல் வழக்கம்போல் வாகனங்களில் வெளியே நடமாடி வருகின்றனர். இதனால் கர்நாடகா முழுவதும் வாட்டாள் நாகராஜ் அறிவித்த பந்த் போராட்டம் பெங்களூரில் பிசுபிசுத்துப்போய் உள்ளது.

பெங்களூரில் சுதந்திர பூங்காவில் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பெங்களூரில் சுதந்திர பூங்கா, மைசூர் வங்கி சர்க்கிள், அனந்த்ராவ் சர்க்கிள் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+