Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓல்ட் மைசூர் தான் பிரச்சனை..ஆனால் கர்நாடகாவில் ஆச்சர்யமான மாற்றம்..இன்று முழுஅடைப்பு எப்படி இருக்கு?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பந்த் போராட்டத்திற்கு ஓல்ட் மைசூரு பெல்ட் பகுதிகளில் மட்டுமே ஆதரவு இருக்கிறது. மற்ற பகுதிகளில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயங்கி வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.. இதன் காரணமாக காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

Karnataka bandh movement has support only in the Old Mysore belt areas

இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பதகு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பை நடத்தி இருந்தார்கள். இந்நிலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி (இன்று) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே, கர்நாடகத்தில் இன்று காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.இந்த முழு அடைப்புக்கு பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், 1,900 அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதேநேரம் முழு அடைப்புக்கு அனுமதி இல்லை என்று கர்நாடாக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அறிவித்திருந்தார்,

என்றாலும், கர்நாடக முழு அடைப்பு காரணமாக ஓல்ட் மைசூரு பெல்ட் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது,. பால், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் பெங்களூருவில் வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டுளளது. முழு அடைப்புக்கு கர்நாடக சினிமா வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருப்பதால், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட உள்ளது. நகைக்கடைகளும் மூடப்படுகின்றன. பெங்களூருவில் ஆட்டோக்கள், வாடகை கார்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்று ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயக்கப்படவில்லை. நடைபாதை வியாபாரிகளும், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து, நடைபாதை கடைகள், ஓட்டல்கள் திறக்கப்படாது என்று அறிவித்திருந்தனர். அதன்படியே கடைகள் திறக்கப்படவிலலை.

முழு அடைப்புக்கு அனுமதி கிடையாது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்திருந்தால் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. காவிரி பிரச்சனையை பொறுத்தவரை காவிரி ஆற்றினால் பயன்பெற்று வரும், கர்நாடகாவின் 9 மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் இடையே தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதன்படி கர்நாடகாவின் காவிரி பகுதிகளான ஓல்ட் மைசூரு என்று அழைக்கப்படும் 9 மாவட்டங்களில் தான் பந்திற்கு முழு ஆதரவு உள்ளது.

அதாவது பெங்களூரு ரூரல், பெங்களூரு நகர்புறம், மைசூரு,மாண்டியா, சிக்கபல்லாபுரா, கோலார், ராமநகரா, துமகுரு, சாம்ராஜ்நகரா ஆகிய 9 மாவட்டங்களில் பந்த் போராட்டத்திற்கு முழு ஆதரவு உள்ளது. ஆனால் மற்ற கர்நாடகா பகுதிகளில் பந்திற்கு போதிய ஆதரவு இல்லை. அங்கு பேருந்துகள் ஓடுகின்றன. கடைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன, மத்திய கர்நாடகா பகுதிகளான சித்ரதுர்கா, தேவனகரி, ஹசன் மாவட்டங்களில் வழக்கமான நிலையே இருக்கிறது.

இதேபோல் கடலோர கர்நாடகா பகுதிகளில் உடுப்பு, தட்சிண கன்னடா, உத்தர் கன்னடா ஆகிய பகுதிகளிலும், பாம்பே கர்நாடகா பகுதிகளான, ஹாவேரி, ஹாகாக், தார்வாட், பெலகாவி, பால்கோட்,விஜயபுரா ஆகிய பகுதிகளிலும், ஹைதராபாத் கர்நாடாகா பகுதியான பெல்லாரி, பித்தார், கலபுரகி, கோபல்லா, ராய்சூர், விஜயநகரா, யாதகிரி ஆகிய பகுதிகளிலும் பந்திற்கு ஆதரவு இல்லை. பேருந்துகள் ஓடுகின்றன.கடைகள், இயங்கி வருகிகின்றன.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மொழி, இனம் என பிரித்து சில அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகள் பிரச்சனை செய்தாலும் இரு மாநிலங்களிலும் ஒற்றுமையான மனநிலையே உள்ளது.அதற்கு ஒல்ட் மைசூர் பகுதியை தவிர மற்ற பகுதிகளில் உள்ள நிலையே சாட்சியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+