"பஞ்சு மிட்டாய் & கோபி மஞ்சூரியனுக்கு தடை!" தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் அதிரடி.. என்ன காரணம்
பெங்களூர்: உடலுக்கு ஆபத்தான நிறமிகள் சேர்க்கப்படுவதால் கர்நாடக மாநிலத்தில் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்த நவீன உலகில் நாம் சாப்பிடும் பல உணவுகள் நச்சுத்தன்மை நிறைந்ததாக மாறி வருகிறது. ஆனால், அதன் டேஸ்ட் சூப்பராக இருப்பதால் நச்சுத்தன்மையை மறந்து பலரும் அதை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் உணவாகப் பஞ்சு மிட்டாய் இருக்கிறது. இருப்பினும், பஞ்சு மிட்டாயில் உடலுக்கு ஆபத்தான நிறமிகள் இருப்பதாக சில வாரங்களாகப் புகார்கள் எழுந்துள்ளன.
கர்நாடகாவில் தடை: இதற்கிடையே கர்நாடக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது உடலுக்கு ஆபத்தான நிறமிகள் சேர்க்கப்படுவது உறுதியானதால் கர்நாடக மாநிலத்தில் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோடமைன்-பி என்ற நிறமிக்கும் முழுமையாகத் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் என இரண்டையும் பலரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பஞ்சு மிட்டாய் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்பட்டும் இந்த இரண்டிற்கும் கர்நாடக அரசு மொத்தமாகத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு: முன்னதாக கடந்த மாதம் தான் தமிழக அரசு பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்து இருந்தது. மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன் பி கலந்திருப்பதால், பஞ்சு மிட்டாய் மற்றும் இந்த நிறமியைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுகளை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்தது.
அதேபோல வடக்கு கோவாவில் சாலையோரக் கடைகளில் 'கோபி மஞ்சூரியன்' விற்கத் தடை விதிக்கப்பட்டது. 'கோபி மஞ்சூரியன்' தயாரிக்கப்படும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் குறித்து கவலை எழுப்பிய மபுசா நகரின் நகராட்சி கவுன்சில் தெரு கடைகள் சுகாதாரமற்ற முறையில் கோபி மஞ்சூரியன் செய்வதால் அவர்கள் கோபி மஞ்சூரியன் விற்கத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications