சுத்த மோசம்.. வந்து விழுந்த மனைவியின் வீடியோ.. பதறிய கணவன்.. டக்னு கல்யாண பெண் எடுத்த முடிவு? சபாஷ்
பெங்களூரு: நமக்கு இந்த சோஷியல் மீடியாக்கள் மட்டும், இன்று இல்லையானால், பல கேடுகெட்ட விஷயங்கள் வெளியே தெரியாமல் அப்படியே "அமுங்கிப்போய்விடும்" போல.. கர்நாடகா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது பாருங்கள்.
பெலகாவியின் கிட்டூர் நகரை சேர்ந்தவர் முத்துராஜ்.. 24 வயதாகிறது.. இவர் தன்னுடைய வீட்டுக்கு அருகிலிருக்கும் பெண் ஒருவரை காதலித்து வந்தார்.. எனக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது உன்னுடன்தான் என்று, அந்த பெண்ணிடம் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

இதனால், அந்த பெண்ணும், முத்துராஜை உயிருக்கு உயிராக நேசித்தார்.. ஒருகட்டத்தில், அந்த பெண்ணுடன் முத்துராஜ் நெருங்கி பழக ஆரம்பித்தார்.. தன்னை திருமணம் செய்து கொள்ளும் போகும் காதலன்தானே? என்று நினைத்த, அந்த இளம்பெண்ணும் முத்துராஜுடன் எல்லைமீறி பழகி வந்தார்..
போட்டோக்கள்: ஆனால், அந்த பெண்ணுக்கு தெரியாமல், அவருடன் உல்லாசமாக இருந்தபோதெல்லாம், அதனை வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் எடுத்து வந்தார் முத்துராஜ்.. சில காலம் கழித்து, அந்த பெண் முத்துராஜிடம் கல்யாண பேச்சை எடுத்தார்.. ஆனால், முத்துராஜ் கல்யாணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்... மேலும், தன்னுடன் பழகிய விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெண், என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டிலும் காதலை சொல்ல முடியாமல் மனம்புழுங்கி அழுது வந்துள்ளார்.. இறுதியில், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையையே கல்யாணமும் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்புதான் அப்பெண்ணுக்கு கல்யாணம் நடந்துள்ளது.
வீடியோக்கள்: இந்நிலையில், முத்துராஜ், உல்லாசமாக இருந்தபோது எடுத்த போட்டோக்கள், வீடியோக்களை, அந்த பெண்ணின் கணவரின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார்.. மேலும், கணவரின் குடும்பத்தினரிடம் அவைகளை காட்டி அதிர்ச்சியை தந்துள்ளார்..
இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து முத்துராஜிடம் நியாயம் கேட்டதற்கு, அவர்களையும் கடுமையாக தாக்கியிருக்கிறார் முத்துராஜ்.. கணவரும், அவரது குடும்பத்தினரும் இந்த அந்தரங்க வீடியோக்களை பார்த்து கொந்தளித்து போனார்கள்.. உடனடியாக அப்பெண்ணை தங்கள் வீட்டிலிருந்து விரட்டி விட்டார் கணவர்..
புகார்கள்: இதனால், பெண்ணின் பெற்றோர் போலீசுக்கு ஓடினார்கள். ஆனால், புகார் அளிக்க சென்றபோது போலீசார் பெற்றேருக்கு முறையாக பதிலளிக்கவில்லையாம்.. இதையெல்லாம் பார்த்து அந்த இளம்பெண் நிலைகுலைந்து போய்விட்டார்.. வேறுவழியின்றி, முத்துராஜின் வீட்டுக்கு முன்பு போராட்டத்தையும் முன்னெடுத்தார்..
கணவனால் துரத்தப்பட்ட பெண், முன்னாள் காதலன் வீட்டில் போராட்டம் நடத்தும் செய்தி, மீடியாவில் எதிரொலிக்க துவங்கியது.. இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும், அந்த பெண்ணுக்காக குரல் கொடுக்க துவங்கினார்கள்.. தன்னுடைய குடும்பம் பாதிக்கப்பட்டதற்கு முத்துராஜ் உள்ளிட்ட 8 பேர் தான் காரணம் என்று இளம்பெண்ணின் குற்றச்சாட்டுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள் கூடின..
வெற்றி: இந்த செய்தி மிகப்பெரிய அளவில் வைரலாகிவிட்டதால், உஷாரான கிட்டூர் போலீசார் இந்த விஷயத்தை கையிலெடுத்தனர்.. முத்துராஜ் உள்ளிட்ட குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆனால், கணவரின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை என்றாலும், முன்னெடுத்த போராட்டத்தில் அப்பெண்ணுக்கு வெற்றி கிடைத்துவிட்டது..!!












Click it and Unblock the Notifications