கர்நாடகாவில் இஸ்லாமிய இளைஞர் கொலை.. மதம் மாறி காதல்.. பெண்ணின் பெற்றோரே கூலிப்படை ஏவியது அம்பலம்
பெங்களூரு : பெலகாவி இளைஞர் கொலை வழக்கு விசாரணையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கொல்லப்பட்ட 24 வயதான அர்பாஸ் அஃதாப் முல்லாவின் கொலை தொடர்பாக அர்பாஸின் காதலியின் பெற்றோர் உள்பட 10 பேரை பெலகாவி போலீசார் கைது செய்தனர். தனது மகளை காதலித்ததற்காக அர்பாஸை கொலை செய்ய பெண்ணின் தந்தை கூலிப்படையை அனுப்பியது தெரியவந்துள்ளது.
இளைஞர் கொலை தொடர்பாக புண்டலிகா மகாராஜ் (39), குத்தபுத்தீன் அல்லாபக்ஷ் (36), சுசீலா ஈரப்பா (42), மாருதி பிரஹ்லாத் (30), மஞ்சுநாத் துகாரம் (25), கணபதி ஞானேஸ்வரா (27), ஈரப்பா பசவன்னி கும்பரா (54), பிரசாந்த். கல்லப்பா (28), பிரவீன் சங்கர் (28) மற்றும் ஸ்ரீதர் மகாதேவ டோனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அர்பாஸ் அஃதாப் முல்லா என்ற 24 வயது இளைஞர் காணாமல் போனார். காணாமல் போன மறுநாள் அவரது தலை துண்டிக்கப்பட்ட உடல் கானாபுரா அருகே ஒரு ரயில்வே தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை
இது தொடர்பாக அவரது தாயார் நஜீமா ஷேக் போலீசில் அளித்த புகாரில், தனது மகன் ஒரு இந்து பெண்ணை காதலித்ததாகவும், இந்த உறவை விரும்பாத பெண்ணிண் தந்தை தனது மகனை கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :

கூலிப்படை
பெலகாவியில் உள்ள ஆஸம் நகரைச் சேர்ந்த அர்பாஸ் (24 வயது), சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி, பெலகாவி நகரில் கார் விற்பனையாளராக பணிபுரிந்தார். ஒரு இந்து பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர் ஈரப்பா மற்றும் சுசீலா ஈரப்பா, அர்பாஸை கூலிப்படை மூலம் கொல்ல முடிவு செய்தார்கள். இதற்காக புண்டலிகா மகாராஜ் என்பவரின் தலைமையிலான கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளனர்.

சிம் உடைப்பு
இதையடுத்து புண்டலிகா மகாராஜ், அர்பாஸையும், அவரது தாயாரையும் கானாப்பூர் வருமாறு அழைத்துள்ளார். இதன்பேரில் இருவரும் அங்கு சென்றுள்ளனர். அங்கு அர்பாஸை கொடூரமாக தாக்கிய கும்பல் அவரிடம் செல்போனில் இருந்த இந்து பெண் தொடர்பான புகைப்படங்களை அழித்ததுடன். சிம்மையும் உடைத்து மிரட்டி உள்ளனர்.

கொடூரமாக கொலை
இந்நிலையில் செப்டம்பர் 28 அன்று, பெண்ணின் பெற்றோரிடம் பணம் வாங்கி கொண்டு, கூலிப்படை தலைவன் புண்டலிகா மற்றும் அவரது ரவுடிகள் குழு, அபிராஸை தனது இடத்திற்கு அழைத்து வந்து பணம் மற்றும் பிற உடைமைகளை கொள்ளையடித்ததுடன், அவரை கொன்று உடலை ரயில் தண்டவாளத்தில் வீசி எறிந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கதறியபடி அப்ராஸின் அம்மா நஜீமா ஷேக் அளித்த புகாரை ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

10 பேர் கைது
விசாரணையில் தான் தனது மகளை காதலித்ததற்காக அர்பாஸை கொலை செய்ய காதலியின் பெற்றோர்களான ஈரப்பா மற்றும் சுசீலா ஈரப்பா, கூலிப்படையை அனுப்பியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அர்பாஸ் கொலை தொடர்பாக புண்டலிகா மகாராஜ் (39), குத்தபுத்தீன் அல்லாபக்ஷ் (36), சுசீலா ஈரப்பா (42), மாருதி பிரஹ்லாத் (30), மஞ்சுநாத் துகாரம் (25), கணபதி ஞானேஸ்வரா (27), ஈரப்பா பசவன்னி கும்பரா (54), பிரசாந்த். கல்லப்பா (28), பிரவீன் சங்கர் (28) மற்றும் ஸ்ரீதர் மகாதேவ டோனி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது., மகளின் காதலனை கொல்ல பெற்றோரை பணம் கொடுத்து கூலிப்படை நியமித்தது கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications