'ரோடு சரி இல்லை' என சொன்ன சாமியார்.. உடனே மைக்கை பிடுங்கி.. மேடையிலேயே டென்ஷன் ஆன முதல்வர் பசவராஜ்
பெங்களூரு: பெங்களூருவில் வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதில்லை என சாமியார் ஒருவர் ஆதங்கத்துடன் பேசிக்கொண்டு இருந்ததை அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த முதல்வர் பசவராஜ் பொம்மை ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி மைக்கை பிடுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தை ஒட்டி அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தற்போதே முனைப்பு காட்டி வருகிறது. பல்வேறு வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அளித்து வருகிறது. அதேபோல், ஆளும் பாஜகவும் ஆட்சியை விட்டு விடக்கூடாது என்பதில் பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களையும் அறிவித்து வருகிறது.

ஆக்கிரமிப்புகளை தடுக்க தவறியதே..
இதனால், கர்நாடக சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு பெங்களூருவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளம் கடும் தலைவலியை ஏற்படுத்தும் விதமாகவே அமையும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பெங்களூருவின் மோசமான உள்கட்டமைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்க தவறியதே பெரு வெள்ளத்திற்கு காரணம் என்று விமர்சிக்கும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் உள்ள பாஜகவையும் சாடி வருகிறது.

சாமியார் ஈஸ்வரானந்தபுரி
எனவே இந்த பிரச்சினை பாஜகவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம் என்று தெரிகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் பாஜக தயாராகி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவின் மகாதேவபுரா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்றார். இதே நிகழ்ச்சியில் சாமியார் ஈஸ்வரானந்தபுரி என்பவரும் பங்கேற்று இருந்தார். மேடையில் சாமியார் ஈஸ்வனந்தபுரி பேசும் போது, பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் நிரந்தர தீர்வு காண்பதில்லை என பேசினார்.

அரசியல்வாதிகளுக்கு தெரிவது இல்லை
சாமியார் ஈஸ்வரானந்தபுரி கூறியதாவது:- "தனது தொகுதியில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாகவும் மோசமான உள்கட்டமைப்புகள் இருப்பதாகவும் இதற்கு அரசியல் வாதிகளே காரணம். மழை பெய்யும் போது மட்டுமே அரசியல்வாதிகள் வருகின்றனர். பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதில்லை. என்ன செய்வது என்றே அரசியல்வாதிகளுக்கு தெரிவது இல்லை. நிரந்தர தீர்வு காணப்படும் என்று முதல்வர் கூறுகிறார். வெறும் வாக்குறுதிகளை மட்டும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மைக்கை பிடுங்கிய பசவராஜ் பொம்மை
அப்போது அருகில் இருந்து இதைக் கேட்ட முதல்வர் பசவராஜ் பொம்மை டென்ஷன் ஆனார். உடனே சாமியாரிடம் இருந்து மைக்கை பிடுங்கிய பசவராஜ் பொம்மை, "வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கக் கூடிய நபர் தான் கிடையாது என்றும் பணிகளை செய்து முடிப்பவன்" என்றும் கூறினார். மேலும், "இந்த பிரச்சினைகளை சரி செய்ய நிதியை ஒதுக்கியிருக்கிறேன். நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்" என்றார். மேடையில் தொகுதியில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசிய சாமியாரிடம் மைக்கை பிடுங்கிய முதல்வர் பசவராஜ் பொம்மையின் செயல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசும் வகையில் அமைந்தது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications