மேகதாது அணை.. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார்
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார்
பெங்களூரு: மேகதாது அணை திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க கோரி, மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பேச கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார்.
நீண்ட காலமாகவே, கர்நாடகம், தமிழகம் இடையே காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது...
இதனிடையே, கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது... இதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது..

அணை
இதற்காக டெல்லி வரை சென்று தமிழக அரசு சார்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டது.. தமிழக அரசியல் கட்சிகளும் அணை கட்டக்கூடாது என்றும், அப்படி கட்டினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறது.. இதையும் மீறி அணையை கட்டியே தீருவோம் என்று கநாடகா உறுதியாக இருக்கிறது.

நதி நீர் பங்கீடு
இந்நிலையில், மேகதாது அணை திட்டம், நதி நீ்ர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நாளை சந்தித்துப் பேச உள்ளார்.. அதற்காக பசவராஜ் பொம்மை இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

பசவராஜ் பொம்மை
இந்த பயணம் குறித்து பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசும்போது, "அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க நான் டெல்லி போகிறேன்.. கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல், மூத்த வக்கீல்கள், சட்ட நிபுணர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்... நதிநீர் பிரச்சினைகளில் கர்நாடக அரசின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பது குறித்து அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

விவசாயம்
கர்நாடகா மாநிலத்தில் நிலம், நீர், மொழியை பாதுகாக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்வேன்... இதில் யாருக்கும் எந்த விதமான ஆதங்கமும் ஏற்பட தேவையில்லை.. 26ம் தேதி மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசவிருக்கிறேன்.. இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கவும் போகிறேன்.. மத்திய சுகாதாரம், நிதி, ஜல்சக்தி, விவசாயம் மற்றும் ராணுவ துறைகளின் அமைச்சர்களை சந்திக்க உள்ளேன்" என்றார் பசவராஜ் பொம்மை.












Click it and Unblock the Notifications