முதல்வர் பதவி.. சித்தராமையா ஆதரவு அமைச்சர் -டிகே சிவக்குமாரின் தம்பி சுரேஷ் கடும் சண்டை! பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியில் சித்தராமையா 5 ஆண்டு தொடர்வார் என அமைச்சர் எம்பி பாட்டீல் கூறிய நிலையில் டிகே சிவக்குமாரின் தம்பியும், காங்கிரஸ் எம்பியுமான டிகே சுரேஷ் கடும் கோபமடைந்தார். மேலும் விதானசவுதாவில் எம்பி பாட்டீலை சந்தித்த டிகே சுரேஷ் கேள்வியெழுப்பிய நிலையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இருப்பினும் முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் மேலிடம் சிக்கலை சந்தித்தது. அதாவது கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.
முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்க டிகே சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என அவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டவர்களிடம் கோரினார். இருப்பினும் இறுதியில் முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. துணை முதல்வர் பொறுப்பு டிகே சிவக்குமார் நியமிக்கப்பட்டார். இருவரும் பதவியேற்றுள்ளனர்.

இதற்கிடையே தான் புதிய தகவல் வெளியானது. அதாவது முதல்வர் பதவி என்பது 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு டிகே சிவக்குமாருக்கும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. இதுபற்றி காங்கிரஸ் மேலிடம் எதுவும் கூறாத நிலையில் சித்தராமையா 5 ஆண்டு முதல்வராக இருப்பாரா? இல்லாவிட்டால் இரண்டரை ஆண்டுகளில் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு முன்பு சித்தராமையா ஆதரவாளரும், அமைச்சருமான எம்பி பாட்டீல், ‛‛சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார். முதல் இரண்டரை ஆண்டு ஒருவர், அடுத்த இரண்டரை ஆண்டு ஒருவர் முதல்வராக இருப்பார் என எந்த ஒப்பந்தமும் இல்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் இருந்தால் அதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவிப்பார்'' என்றார். இது டிகே சிவக்குமார் தரப்பை கடும் அதிருப்தியடைய செய்தது.
மேலும் காங்கிரஸில் பரபரப்பை பற்றவைத்து விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து நேற்று முன்தினம் எம்பி பாட்டீல் கூறும்போது, ‛‛காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறியதை தான் நான் கூறினேன்'' என விளக்கமும் அளித்தார். இந்த நிலையில் தான் பெங்களூர் விதானசவுதாவில் (கர்நாடகா சட்டசபை கட்டடம்) கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்நிலையில் தான் அங்கு டிகே சிவக்குமாரின் தம்பியும் எம்பியுமான டிகே சுரேஷ் வந்திருந்தார்.
அப்போது டிகே சுரேசும், எம்பி பாட்டீலுக்கு நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். இந்த வேளையில் டிகே சுரேஷ், ‛‛5 ஆண்டுகள் முதல்வராக சித்தராமையா இருப்பார் என்று வாய்க்கு வந்ததை பேசினால் சரியாக இருக்காது'' என ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார். இதற்கு, எம்பி பாட்டீல், ‛‛நான் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியதை தான் தெரிவித்தேன்'' என்றார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற டிகே சுரேஷ், ‛‛இதுபற்றி கூற நீங்கள் யார்?'' என கேட்டார்.இதையடுத்து பொறுமை இழந்த எம்பி பாட்டீல், ‛‛அதனை கேட்க நீங்கள் யார்?'' என பதிலுக்கு கேள்வியெழுப்ப இருவரிடையே வார்த்தை சண்டை ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பிற தலைவர்கள் இருவரையும் அழைத்து சென்றனர். இதனால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் விதானசவுதாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி டிகே சுரேஷ் கூறுகையில், ‛‛சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். தற்போதும் முதல்வராகி உள்ளார். இன்னும் 5 ஆண்டுகள் என 10 ஆண்டுகள் முதல்வராக இருக்கட்டும். எம்பி பாட்டீல் கூட முதல்வராக ஆகலாம்'' என விரக்தியை வெளிப்படுத்தினார். இதுபற்றி எம்பி பாட்டீல் கூறுகையில், ‛‛சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியதை தான் நான் கூறினேன். இந்த விவகாரத்தில் என்னை யாரும் எச்சரிக்கவோ, மிரட்டவோ முடியாது. நான் யாருக்கும் பயந்தவன் அல்ல'' என்றார். இந்த விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications