7 முறை.. டிராபிக் விதிமீறலில் ஈடுபட்ட சித்தராமையா கார்! தள்ளுபடியில் அபராதம் செலுத்திய சிஎம் ஆபீஸ்
பெங்களூர்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் கார் மீது போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 7 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் இதற்கான அபராத தொகை தற்போது செலுத்தப்பட்டிருக்கிறது.
சித்தராமையாவுக்கு அலுவல் பணிக்காக டொயோட்டா ஃபார்ச்சூனர் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த கார் தொடர்ந்து விதி மீறல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறது. நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, கண்காணிப்பு கேமராக்கள் முதலமைச்சரின் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் பல விதிமீறல்களைப் பதிவு செய்துள்ளன என போக்குவரத்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

6 முறை சீட் பெல்ட் அணியாதது, மற்றும் ஒரு முறை அதிவேகமாக பயணித்தது என விதி மீறல்கள் காரணமாக மொத்தம் 7 வழக்குகள் முதலமைச்சரின் கார் மீது பதியப்பட்டது. இவை அனைத்தும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்தவை. சீட் பெல்ட் விதிமீறல்களில் முதலமைச்சர் சித்தராமையா பயணிக்கும்போதுதான் அவை நிகழ்ந்ததாகத் தெரிகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டதே சமீபத்திய விதிமீறலாகும்.
ஏழு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் தற்போது செலுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்தி, அவரது அலுவலகம் ரூ. 2,500 செலுத்தி இந்த வழக்குகளை முடித்துள்ளது. அதேபோல கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திராவின் கார் சம்பந்தப்பட்ட 10 போக்குவரத்து விதிமீறல்களுக்கும் அபராதம் செலுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கமான விஷயம்தான். ஆனால் முதலமைச்சரின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படுவதும், அதற்கான தொகை கட்டப்பட்டதும்தான் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் கர்நாடக மாநில அரசு, போக்குவரத்து விதிமீறல் காரணமாக விதிக்கப்பட்ட அபராத தொகைக்கு 50 சதவீத தள்ளுபடியை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் முதலமைச்சர் காருக்கு விதிக்கப்பட்ட அனைத்து அபராதங்களும் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதாவது மொத்த அபராத தொகை ரூ.5,000. இதில் 50% தள்ளுபடி போக ரூ.2,500 செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த தள்ளுபடி முதல்வரின் காருக்கு மட்டுமல்ல, கர்நாடகா முழுவதும் நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும் இந்த தள்ளுபடி திட்டம் பொருந்தும்.
விஜயேந்திராவின் கார் சம்பந்தப்பட்ட விதிமீறல்களில் சீட் பெல்ட் அணியாதது, அதிவேகம், சிக்னல் ஜம்ப் ஆகியவை அடங்கும். கடந்த 2020 முதல் நிலுவையில் இருந்த ரூ. 3,250 அபராதத்தை அவரது அலுவலகம் தற்போது செலுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சலுகைத் திட்டம் ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 12 வரை அமலில் இருக்கும் என்று காவல்துறை கூறியுள்ளது. 2019 மற்றும் 2025 க்கு இடையில் பெங்களூரில் சுமார் 3 கோடி போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்பட்டு அவை கட்டப்படாமல் நிலுவையில் உள்ளன. இதன் மொத்த அபராதத் தொகை சுமார் ரூ. 1,000 கோடி ஆகும். சனிக்கிழமை நிலவரப்படி, 16,21,721 வழக்குகள் தீர்க்கப்பட்டு, மொத்தம் ரூ. 45,52,750 வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications