கர்நாடக காங்கிரஸ் யாத்திரையில் திடீர் பணமழை! ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய டிகே சிவக்குமார்! சர்ச்சை
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சார்பில் பிரஜா த்வானி யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் யாத்திரையில் டிகே சிவக்குமார் பங்கேற்ற நிலையில் திடீரென்று பணமழை பொழிந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கு 2018 ல் தேர்தல் நடந்தது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. 5 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வர உள்ள நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி இடையே நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. இதுதவிர தெலங்கானா முதல்வர் பிஆர்எஸ், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், மேலும் சில சிறிய கட்சிகளும் போட்டியிட உள்ளன. இருப்பினும் கர்நாடகா தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி இடையே போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் சார்பில் 90க்கும் அதிகமான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. ஆம்ஆத்மியும் 90 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. தேர்தல் தேதி வெளியான பிறகு பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

காங்கிரஸ் யாத்திரை
இந்நிலையில் தான் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே ஆளும் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் யாத்திரைகள் நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் சார்பில் பிரஜா த்வானி யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெவினஹள்ளி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் பிரஜா த்வானி யாத்திரை மேற்கொண்டார்.

பாஜக, ஜேடிஎஸ்ஸை விமர்சித்த...
டிகே சிவக்குமார் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது டிகே சிவக்குமார் திறந்த பஸ்சில் நின்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்த டிகே சிவக்குமார் பாஜக, ஜேடிஎஸ் கட்சியை விமர்சனம் செய்தார். மேலும் டிகேசிவக்குமார் பயணித்த திறந்த பஸ்சின் முன்பும், பின்பும் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்தனர்.

ரூ.500 நோட்டுகளால் பணமழை
மேளதாளங்கள் முழங்க, வழிநெடுகிலும் நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடந்தன. இந்த வேளையில் டிகே சிவக்குமார் திடீரென்று 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து பஸ்சின் மேல் நின்றபடியே தூக்கி வீசினார். இதனால் யாத்திரையில் பணமழை பொழிந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி சர்ச்சையாகி உள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications