கர்நாடகாவில் சித்தராமையா ஆட்சிக்கு ஆபத்து? டிகே சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா காங்கிரஸ் அரசியல் குழப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முதல்வர் சித்தராமையாவை மாற்ற வேண்டும். முதல்வர் பதவியை டிகே சிவக்குமாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் டிகே சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளது பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார். துணை முதல்வராகவும், கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகிறார்.

karnataka-congress-crisis-dk-shivakumar-camp-mlas-rush-to-delhi-and-urging-removes-siddaramaiah-as

கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் தான் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது. சித்தராமையாவுக்கு பதில் டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இதுவரை அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் மட்டுமே டிகே சிவக்குமார் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தற்போது டெல்லியில் முகாமிட் தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக டிகே சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 10 பேர் டெல்லி சென்றுள்ளனர்.

அதன்படி தினேஷ் கோலிகவுடா, ரவி கனிகா, குப்பி வாசு உள்பட 10 பேர் டெல்லி சென்றுள்ளனர். நாளை இன்னும் அதிகமான எம்எல்ஏக்கள் டெல்லி செல்ல உள்ளனர். அதில் ஆனேக்கல் சிவண்ணா, நெலமங்களா சீனிவாஸ், இக்பால் உசேன், குனிகல் ரங்கநாத், சிவகங்கா பசவராஜ், பாலகிருஷ்ணா உள்பட இன்னும் சிலர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி இக்பால் உசேன் என்ற எம்எல்ஏ கூறுகையில், ‛‛நான் டெல்லிக்கு செல்வது தங்கம் அல்லது வைரம் வாங்குவதற்கு அல்ல.. நான் டிகே சிவக்குமாருக்காக செல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

இது கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோரைவ சந்தித்து முதல்வர் பதவியை சித்தராமையாவிடம் பறித்து டிகே சிவக்குமாிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளனர். முதற்கட்டமாக முதலில் மல்லிகார்ஜூன கார்கேவை சந்திக்க உள்ளதாகவும், அதன்பிறகு நாளை காலையில் கேசி வேணுகோபாலை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற டிகே சிவக்குமார் முக்கிய பங்காற்றினார். அவர் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் தலைவராக டிகே சிவக்குமாரின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும். ஓல்டு மைசூர் மாவட்டங்களில் அதிக இடங்களை கைப்பற்ற டிகே சிவக்குமார் தான் முக்கிய காரணம். இந்த பகுதியில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அவர்கள் தான் வெற்றியை தீர்மானிப்பார்கள். அந்த வகையில் டிகே சிவக்குமாரும் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை நம்பி அனைவரும் வாக்காளித்தனர். இது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

இதனால் டிகே சிவக்குமார் தனக்கு முதல்வர் பதவியை கேட்டார். ஆனால் கட்சி மேலிடம் மூத்த தலைவராக இருக்கும் சித்தராமையாவை முதல்வராக்கியது. டிகே சிவக்குமாருக்கு கட்சி மேலிடத்திடம் நற்பெயர் இருந்தாலும் அவர் மீது உள்ள சிபிஐ வழக்குகளை காரணம் காட்டி கட்சி மேலிடம் அவருக்கு பதவி வழங்கவில்லை. அதேவேளயைில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், அதன்பிறகு இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமார் முதல்வராகவும் இருப்பார் என்று கண்டிஷன் விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது.

இதுபற்றி இதுவரை சித்தராமையா, டிகே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் மேலிடம் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் டிகே சிவக்குமார் ஆதரவாளர்கள் இரண்டரை ஆண்டுக்கு பிறகு டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறி வருகின்றனர். அதன்படி இன்றுடன் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனால் தான் சித்தராமையாவை நீக்கிவிட்டு டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+