பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பல பெண்கள் ஹிஜாப் அணிவதில்லை.. பாலியல் வன்கொடுமை அதிகரிக்க அதுவே காரணம்.." காங். எம்எல்ஏ சர்ச்சை

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாகக் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கூறிய கருத்துகள் சர்ச்சை கிளப்பியுள்ளது

அண்டை மாநிலமான கர்நாடகாவில் முதலில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலில் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு கிளம்பியது.

ஒரே நேரத்தில் 3 முக்கிய செயற்கைகோள்கள்.. நாளை விண்ணில் ஏவும் இஸ்ரோ.. என்ன சிறப்பு? ஒரே நேரத்தில் 3 முக்கிய செயற்கைகோள்கள்.. நாளை விண்ணில் ஏவும் இஸ்ரோ.. என்ன சிறப்பு?

அது அப்படியே உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா மாவட்டங்களுக்கும் பரவியது. இதனால் அங்கு ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் விவகாரம்

அங்குள்ள பல பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லீம் பெண்களை சில கல்லூரிகளில் உள்ளே அனுமதிக்கவும் மறுத்தது. அதேபோல அங்கு இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கல்லூரிகளில் இந்துத்துவ மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வரத் தொடங்கினர். இதனால் அங்குப் பல பகுதிகளில் கல்லூரிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

 கர்நாடக ஐகோர்ட்

கர்நாடக ஐகோர்ட்

இதையடுத்து நிலைமையைச் சமாளிக்கக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சீருடையை மட்டுமே மாணவர்கள் அணிந்து வர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 அழகை மறைக்க

அழகை மறைக்க

ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்களை வைத்து பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாகக் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், "ஹிஜாப் என்றால் இஸ்லாத்தில் 'பர்தா' (முக்காடு) என்று பொருள். வயதுக்கு வந்ததும் பெண்கள் தங்கள் அழகை மறைக்கப் பயன்படுவது தான் இது. இன்று நம் நாட்டில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம்.

ஹிஜாப்

ஹிஜாப்

இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? காரணம், பல பெண்கள் ஹிஜாப் அணிவதில்லை. ஆனால், ஹிஜாப் அணிவது கட்டாயமில்லை. தங்களைக் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு தங்கள் அழகைக் காட்ட விரும்பாதவர்கள் மட்டுமே அதை அணிவார்கள். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம் தான்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாலியல் வன்புணர்வுக்கு உடை காரணம் என்ற ரீதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமத் கூறிய இந்த கருத்துக்கு இணையத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

English summary
Karnataka Congress MLA says rape rate is highest in India because several women don't wear hijab: Congress MLA controversial statement about hijab.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X