‛கேப்டன்’ எனக்கூறி.. விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூறிய டிகே சிவக்குமார்.. என்ன சொன்னார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: விஜயகாந்த் மறைவுக்கு கேப்டன் எனக்கூறி கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் தேமுதிக எனும் கட்சியை தொடங்கி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி அரசியலில் நுழைந்தார்.

 Karnataka Deputy CM DK Shivakumar Condolences to Vijayakanth

அதன்பிறகு எம்எல்ஏவான இவர் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். சினிமாவில் நடித்த புகழ், உதவும் குணம் உள்ளிட்டவற்றால் தமிழ்நாடு முழுவதும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. இதனால் அவர் அரசியலில் இன்னும் உயர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் விலகினார். கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே நடிகர் விஜயகாந்த் பங்கேற்று வந்தார். இதற்கிடையே தான் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் நேற்று காலமானார்.


தற்போது சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இங்கிருந்து மதியம் 1 மணிக்கு விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் இறுதி சடங்குகளோடு மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தான் விஜயகாந்த் மறைவுக்கு கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிகே சிவக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சிறந்த நடிகராகவும், புகழ்பெற்ற மனிதராகவும் வாழ்ந்தார். அவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் தற்போது மறைந்துள்ளது. இந்த கடினமானநேரத்தில் நான் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்'' என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் எக்ஸ் வலைதளத்தில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு சார்பில் இன்று விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+