பாஜக ஆட்சியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 36 பேர் பலி.. விசாரிக்கத்தான் குன்ஹா கமிஷன்: டிகே சிவகுமார்
பெங்களூர்: கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 36 பேர் பலியாகினர்; அது தொடர்பாக விசாரணை நடத்தவே நீதிபதி குன்ஹா கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் ஒப்பந்த பணிகளுக்கு 40% லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஒபப்ந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா பதவியும் பறிபோனது. கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது 40% கமிஷன் முக்கிய இடம்பெற்றது.

இதனையடுத்து தற்போதைய கர்நாடகா காங்கிரஸ் அரசு, முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தின் 40% கமிஷன் லஞ்சம் பெற்றது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்தது. அதனைத் தொடர்ந்து முந்தைய பாஜக ஆட்சியில் கொரோனா கால ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க நீதிபதி குன்ஹா கமிஷன் ஒன்றையும் அமைத்துள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தவர் நீதிபதி குன்ஹா. இந்த வழக்கில் பெங்களுரில் 4 ஆண்டுகாலம் சசிகலா சிறை தண்டனை அனுபவித்தார்.
தற்போது ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் நீதிபதி குன்ஹா தலைமையில் கொரோனா கால ஊழல்களை விசாரிக்க கர்நாடகா காங்கிரஸ் அரசு கமிஷன் அமைத்துள்ளது பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், முந்தைய பாஜக ஆட்சியில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 36 பேர் பலியானார்கள். ஆனால் அப்போதைய அரசாங்கம் வெறும் 3 பேர் மட்டுமே பலியானதாக சொன்னது. இது குறித்து விசாரிக்க வேண்டாமா? அதற்காகவே நீதிபதி குன்ஹா கமிஷன் அமைத்துள்ளோம் என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி!












Click it and Unblock the Notifications